பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

லிட்டன் பிரபு (1803 - 1873)

இங்கிலாந்து தேசத்தில் லண்டன்மா நகரத்தில் பிறந்த இவர் ஆங்கில நூலாசிரியராகவும் அரசியல் வாதியாகவும் திகழ்ந்தார். இவருடைய முழுப்பெயர் நுறையசன Edward George Earle Bulwer Lytton என்பது. இவரது தந்தையாகிய ஜெனரல் புல்வர் என்பவர். இவருடைய இரண்டாவது வயதில் காலமானார். ஆகவே, எலிஜபெத் லிட்டன் என்னும் பெயருள்ள இவரது அன்னையார் இவரைப் போற்றி வளர்த்தார். இயற்கையாகவே கல்வியில் விருப்பம் உள்ள இவர், தமது 7-ஆவது வயதில் கவிதைகளை இயற்றி வெளியிட்டார். 1823-இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து உயர்தரக் கல்வி பயின்றார். 1826-இல் பல்கலைக் கழகத்தை விட்ட பிறகு நாவல்களையும் நாடக நூல்களையும் செய்யுள்களையும் இயற்றினார். அரசியலிலும் ஈடுபட்டிருந்தார். 1831-ஆம் ஆண்டு முதல் 1842-ஆம் ஆண்டு வரையில் பார்லிமெண்டு அங்கத்தினராக இருந்தார். 1858-இ அரசாங்கத்தின் வெளிநாட்டுக் காரியதரிசியாக நியமனம் பெற்று அலுவல் செய்தார். 1866-இல் “லார்டு” என்னும் பிரபுப்பட்டம் பெற்றார். 1873-ஆம் ஆண்டு ஜனவரியில் காலமானார்.

66

லிட்டன் பிரபு, நாவல் முதலிய 28 நூல்களை வசன நடையில் எழுதினார். 10 செய்யுள் நூல்களை இயற்றினார். 6 நாடக நூல்களை எழுதினார். இவர் எழுதிய நூல்களில் உலகப் புகழ்பெற்று விளங்குவது. “பாம்பி நகரத்தின் இறுதி நாட்கள்" (The Last days of Pompeii) என்னும் நாவல், இவர் 1833-ஆம் ஆண்டு இத்தாலி தேசம் சென்று அங்கு நேபில்ஸ் நகரத்தில் சிலகாலம் தங்கியிருந்தார். அவ்வமயம் அங்கிருந்த வெசூவியஸ் என்னும் பழைய எரிமலையைக் கண்டார். இந்த மலையின் அடிவாரத்திலே இருந்த பாம்பி என்னும் செல்வம் மிக்க நகரத்தை. இந்த மலையிலிருந்து வெளிப்பட்ட அனற்பிழம்பு மூன்று நாட்கள் வரையில் சாம்பலைக் கக்கி மூடிமறைத்து அழித்துவிட்டது. இது நிகழ்ந்தது கி.பி. 79-இல். இவ்வாறு எரிமலையினால் அழிந்த பாம்பி நகரம் 1748-இல் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு 1808-இல், புதைபொருள் ஆராய்ச்சிக்காரர்களால் முழுவதும் தோண்டி எடுக்கப்பட்டது. தோண்டி எடுக்கப்பட்ட இந் நகரத்தைக் கண்ட லிட்டன் பிரபு, இதன் அழிவைச் சரித்திரக் கதையாக அமைத்து 1834-இல் “பாம்பி நகரத்தின் இறுதி நாட்கள்” என்னும் நாவலை எழுதினார்.