பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடர்:

முதற் படைஞன்:

இரண்டாம் களம்

இடம்: கோட்டைவாசல்.

காலம்: காலை.

கோட்டை காக்கும் படைஞர்.

(நேரிசை ஆசிரியப்பா)

இப்படை தோற்கின் எப்படை ஜயிக்கும்? எப்படி இருந்த திராஜன் பேச்சு!

கல்லும் உருகிக் கண்ணீர் விடும். இப் புல்லும் கேட்கிற் புறப்படும் போர்க்கு.

2-ம் படை: முற்றும் கேட்டைகொல்?

முதற் படை:

முற்றும் கேட்டேன்.

10

15

சற்றும் மனமிலை திரும்புதற் கெனக்கு.

சரியல ஆணையில் தவறுதல் என்றே

வெருவிநான் மீண்டேன். இலையேல் உடன்சென் றொருகை பார்ப்பேன். ஓகோ! சும்மா

விடுவனோ? பார்க்கலாம் விளையாட் டப்போது. என்செய! என்செய! எத்தனை பேரையான்

பஞ்சாய்ப் பறத்துவன்! துரத்துவன்! பாண்டியில்

வஞ்சவிவ் வஞ்சியர் என்செய வந்தார்?

நெஞ்சகம் பிளந்திந் நெடுவாள் தனக்குக் கொஞ்சமோ ஊட்டுவன் குருதி! என்செய! நினைதொறும் உடலெலாம் தின்பது தினவே! பாக்கியம் இல்லையென் கைக்கும் வாட்கும்!

வெருவி - அஞ்சி. பஞ்சாய்ப் பறத்துவன் - பஞ்சுபறப்பது போலப் பறக்கச் செய்வேன்.