பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

2-ம் படை: பாக்கியம் அன்றது. பறைப்பயல் பாவி

3-LD LIML:

20

25

குடிலனோ டுலாவும் கோணவாய்க் கொடியன், சடையன், தலைவனோ டெதுவோ சாற்றித் தடுத்தே நமையெலாம் விடுத்தான் இப்பால்.

கெடுத்தான் அவனே என்னையும். அன்றேல் முடித்தே விடுவனென் சபதம் முற்றும். சண்டிஅச் சங்கரன் வந்துளான் சமர்க்கு. கண்டேன். கையிற் கிடைக்கிற் பண்டென் தாயையும் என்னையும் சந்தையிற் பழித்த வாயினை வகிர்ந்து மார்பினைப் பிளந்து...

245

(வாய்மடித்துப் பற்கடிக்க)

4-ம் படை: வஞ்சியர் அனைவரும் மானமில் மாக்கள்.

3-ம் படை:

முதற் படை:

30

35

பிஞ்சிற் பழுத்த பேச்சினர். யானெலாம்

நன்றா யறிவன். ஒன்றார் என்னுடன்.

சென்றுளேன் ஜனார்த்தனம். கண்டுளேன் வைக்கம்.

விடுவேன் அல்லேன். அடுபோர் முடியினும்

நடுநிசி ஆயினும் அடுகள முழுவதும்

தேடுவன்; சங்கரன் செத்தான் ஆயினும்

நாடி யவன் தலை நசுக்கி மிதித்து

வாயிடை நெடுவேல் இறக்கி...

சீ சீ!

சேவக னாநீ! செப்பிய தென்னை!

யாவரே பிணத்தோ டாண்மைபா ராட்டுவர்? பிணமோ பிணத்தோ டெதிர்க்க!

சடையன் குடிலனுடைய சேவகன். சாற்றி - சொல்லி. வகிர்ந்து கீறி, பிளந்து. ஒன்றார் சேரமாட்டார். ஜனார்த்தனம், வைக்கம் - இவை சேர (மலையாள) நாட்டில் உள்ள ஊர்கள்.