பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

4-ம் சேவ: 15

3-ம் சேவ:

முதற் சேவ:

ஜீவ:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

பாரீர்! இன்றவர் பண்ணிய சாகசம்,

இன்றியாம் பிழைத்ததிங் கிவரால். அன்றேல்

(ஜீவகன் எழுந்து நடக்க)

அரசன் அஃதோ எழுந்தான் காணீர். உரைதரு கின்றான் யாதோ? ஒதுங்குமின். அடுத்திவண் நிற்பீர். அமைதி! அமைதி! 20 கெடுத்தேன் ஐயோ! கெடுத்தேன்! நாணம் விடுத்துயிர் இன்னும் வீணில் தரித்தேன். ஆ! ஆ! என்போல் யாருளர் வீணர்! யாருளர் வீணர்! யாருளர்! யாருளர்! பாண்டியன் தொல்குலம் பட்டபா டின்றுமற் 25 றிதுவோ! இதுவோ! மதிவரு குலமே! மறுவறு நறவே! மாசறு மணியே!

30

அழியாப் பழிப்புனக் காக்கவோ உனது வழியாய் உதித்தேன் மதியிலா யானும்! அந்தோ! இந்து முதலா வந்த

முன்னோர் தம்முள் இன்னார்க் கிரிந்து மாண்டவர் அன்றி மீண்டவர் உளரோ! யாதினிச் செய்குவன்! ஐயோ பொல்லாப் பாதகன் மக்களுள் வெட்கமில் பதடி.

போர்முகத் தோடிப் புறங்கொடுத் தேற்குக் 35 கார்முகம் என்செய! கடிவாள் என்செய!

(பற்கடித்து)

(வில்லும் வாளும் எறிந்து)

சாகசம் - துணிவுச் செயல். மதிவரு குலம் - சந்திரனிலிருந்து வரும் பரம்பரை. நறவு - தேன். இந்து - சந்திரன், நிலா. இரிந்து - தோற்று ஓடி, புறங்கொடுத்தல் -முதுகுகாட்டி ஓடுதல். கார்முகம்- வில். கடிவாள் - கூர்மையான போர்வாள்.