பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

உள்ளத் தெழுச்சியும் உவகையோ டூக்கமும்

95 தள்ளா முயற்சியும் தக்கோர் சார்பும்.

(குடிலனும் பலதேவனும் வர)

உண்டேல் ஊழையும் வெல்லுவம். மண்டமர் அடுவதோ அரிது வடிவேல் அரசே!

குடி:

(தனக்குள்)

இப்பரி சாயர சிருப்பது வியப்பே!

தக்கோர் என்றனன் சாற்றிய தென்னோ!

(அழுவதாகப் பாவித்து ஒருபுறம்

ஒதுங்கி முகமறைந்து நிற்க)

ஜீவ: 100

ஏனிது குடில! ஏன்பல தேவ!

குடி:

ஜீவ: குடி:

ஜீவ:

குடி:

ஜீவ:

குடி:

ஜீவ:

ஆனதென்? அமைச்ச! ஆ! ஆ!

அடியேன்.

வருதி இப்புறம்! வருதியென் அருகே! (அழுது)

திருவடிச் சேவையில்...

(ஏங்கி)

செய்தவை அறிவோம்.

ஜனித்தநாள் முதலா...

உழைத்தனை! உண்மை!

105 உடல்பொருள் ஆவி மூன்றையும் ஒருங்கே...

விடுத்தனை. உண்மை. விளம்பலென்?

குடி:

ஜீவ: குடி:

உண்மையில்

பிசகிலன் என்பது...

நிசம்! நிசம்! அறிவோம்!

(விம்மி)

எல்லாம் அறியும் ஈசனே சான்றெனக்கு அல்லால் இல்லை.

மண்டு அமர் - நெருங்கிச் செய்யும் போர்.