பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

குடி:

200 இதுவரை நிகழ்ந்தவற் றெதுகுறை வெனினும் அதுவெலாம் அகலநின் றரும்போர் ஆற்றுதும்.

வஞ்சியான் இரவே அஞ்சிமற் றொழிந்திடில்

அதுவுமாம் விதமெது?

சேவ:

261

(சேவகன் வர)

உதியன் தூதுவன்

உற்றுமற் றுன்றன் அற்றம்நோக் கினனே.

குடி:

ஜீவ:

205 சரி! சமா தானம் சாற்றவே சார்ந்தான். பெரிதே நின்மதி! ஆ! ஆ! வரச்சொல்.

(வஞ்சித் தூதன் வர)

தூதன்:

தொழுதனன், தொழுதனன். வழுதி மன்னவா!

(வணங்கி)

அருளே அகமாத் தெருளே மதியா

அடலே உடலாத் தொடைபுக ழேயா

210 நின்றவென் இறைவன் நிகழ்த்திய மாற்றம் ஒன்றுள துன்வயின் உரைக்க என்றே விடுத்தனன் என்னை அடுத்ததூ துவனா. இன்றுநீர் இருவரும் எதிர்த்ததில் யாவர் வென்றனர் என்பது விளங்கிடும் உனக்கே. 215 பொருதிட இனியும் கருதிடில் வருவதும் அறிகுவை! அதனால் அறிகுறி உட்கொண் டுறுவது முன்னுணர்ந் துறவா வதற்கே உன்னிடில் தாம்பிர பன்னியி னின்றொரு கும்ப நீருமோர் நிம்ப மாலையும்

220 ஈந்தவன் ஆணையில் தாழ்ந்திடில் வாழ்வை! மதிற்றிற மதித்திரு மாப்பையேல் நதியிடை

-

தியன் - சேரன். உற்று - அடைந்து, வந்து அற்றம் - சமயம். தெருள் தெளிவு, விளக்கம். அடல் வலிவு, வீரம் தொடை மாலை. சொல், பேச்சு. கும்பம் - குடம். நிம்ப மாலை மாற்றம் -

மாலை; இது பாண்டிய மன்னருக்கு உரியது.

வேப்ப