பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

ஜீவ:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

மட்பரி நடாத்தினோர்க் கொப்பா குவையே. ஆதலின் எங்கோன் ஓதிய மாற்றம்

யாதெனிற் கைதவா! வைகறை வருமுன் 225 தாரும் நீரும்நீ தருவையேற் போரை நிறுத்துவன். அல்லையேல் நின்புரம் முடிய ஒறுத்திட உழிஞையும் சூடுவன். இரண்டில், எப்படி உன்கருத் தப்படி அவற்கே.

நன்று! நன்று! நீ நவின்றனை. சிறுவன்

230 வென்றதை நினைத்தோ அலதுமேல் விளைவதைக் கருதித் தன்னுளே வெருவியோ உன்னை விடுத்தனன் என்பதிங் கெடுத்துரை யாதே அடுத்திவண் உள்ளார் அறிகுவர் ஆயினும், மற்றவன் தந்தசொற் குற்ற நம்விடை 235 சாற்றுதும் கேட்டி. தன்பொருள் ஆயின் ஏற்றிரந் தவர்க்கியாம் யாதுமீந் திடுவோம். அருந்திடச் சேரன் அவாவிய புனலும் விரும்பிய சுரும்பார் வேம்பும் விதுகுலம் வரும்பரம் பரைக்காம் அல்லால் எனக்கே

240 உளவல; அதனால் ஒருவனீந் திடுதல் களவெனக் காணுதி. மற்றுநீ கழறிய

உழிஞையங் குளதெனில் வழுதிபாற் பழுதில் நொச்சியும் உளதென நிச்சயம் கூறே.

-

மதில் திறம் - கோட்டையின் வலிமை. மட்பரி - மண்குதிரை. நதியிடை மட்பரி நடாத்தினோர் - என்பது ‘மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினது போல' என்னும் பழமொழியைக் குறிக்கிறது. ஒறுத்திட தண்டிக்க, உழிஞை - உழிஞைப் பூமாலை. பண்டைக்காலத்துத் தமிழரசர், பகையரசரின் கோட்டையை முற்றுகை செய்யும்போது அணியும் மாலை. கோட்டையை வளைத்து முற்றுகை இடுவதற்கு உழிஞைப் போர் என்பது பெயர். உழிஞை சூடுவன் - கோட்டையை முற்றுகையிடுவான். அவாவிய -ஆசைப்பட்ட, சுரும்பு ஆர் - வண்டுகள் மொய்க்கிற. விதுகுலம்- சந்திர குலம் (விது - சந்திரன் )