பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

குடி:

பலதே:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

மாற்றார் தமக்கு மதிகுல மாலையும்

ஆற்றுநீ ருடன்நம் ஆண்மையும் அளித்து

270 நாணா துலகம் ஆளல்போல் நடித்தல் நாணாற் பாவை உயிர்மருட் டுதலே ஒட்டார் பின்சென் றுயிர்வாழ் தலினும் கெட்டான் எனப்படல் அன்றே கீர்த்தி!

அதனாற் குடிலா! அறிகுதி துணிபாய். 275 எதுவா யினும்வரில் வருக, ஒருவனை வணங்கியான் இணங்குவன் எனநீ மதியேல்.

(எழுந்து)

வருவோம் நொடியில், மனோன்மணி நங்குலத் திருவினைக் கண்டுளந் தேற்றி மீள்குவம். கருதுவ பலவுள. காணுதும்.

280 இருநீ அதுகா றிவ்வயின் இனிதே.

(ஜீவகன் போக)

கருதுதற் கென்னே! வருவது கேடே. தப்பினாய் இருமுறை. தப்பிலி நாரணன் கெடுத்தான் பலவிதம் மடப்பயல் நீயே

(பலதேவனை நோக்கி)

அதற்கெலாம் காரணம்.

அறிகுவை, ஒருவன்

285 இதுபோல் வேலுன் நெஞ்சிடை இறக்கிடில்.

271-ம் அடி. “நாணகத்தில்லா ரியக்கம் மரப்பாவை, நாணால் உயிர் மருட்டியற்று" என்னும் திருக்குறளின் கருத்துள்ளது.

272 – 273 அடிகள், “ஒட்டார் பின்சென் றொருவன் வாழ்தலின் அந் நிலையே, கெட்டான் எனப்படுதல் நன்று” என்னும் திருக்குறளைக் கூறுகின்றன. தப்பினாய் இருமுறை - போர்க்களத்திலும், தற்கொலை செய்ய நினைத்தபோதும் அரசன் தப்பியது. தப்பிலி பிழை இல்லாதவன் என்றும் போக்கிரி என்றும் இருபொருள் கொள்க.