பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம்

களம்

இடம் : அரண்மனையில் ஒருசார்.

காலம் : மாலை

(ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை; பலதேவன் ஒருபுறம் நிற்க.) (நேரிசை ஆசிரியப்பா)

ஜீவகன்:

குடி:

ஜீவ:

குடி:

ஜீவ:

குடி:

ஜீவ;

LO

5

ஆதி இன்னதென் றோதுதற் கரிய

வழுதியின் தொழுகுல வாணாள் ஓரிரா எனமதிப் பதற்கும் இருந்ததே! குடில! இத்தனை கேடின் றெங்ஙனம் விளைந்தது? சற்றும் அறிந்திலேன் தையலர் புகலுமுன். மாற்றார் நமது மதிற்புறத் தகழைத்

தூர்த்தார் எனப்பலர் சொல்லுவ துண்மைகொல்!

ஓரிடம் அன்றே. உணர்ந்திலை போலும். (தனதுள்)

வேரறக் களைகுதும். இதுவே வேளை.

10 என்னை! என்னை!

மன்னவா! யானிங்

கென்னென ஓதுவன் இன்றையச் சூது? மருவரு மதிலுள கருவியென் செய்தன? கருவிகள் என்செயும் கருத்தா இன்றியே! காவல் இல்லைகொல்? சேவகர் யாவர்?

தையலர் - பெண்கள். இங்குக் கன்னிமாடத்தில் இருக்கும் பெண்களைச் சுட்டுகிறது. வேறரக் களைகுவம் - என்றது நாராயணனைக் கருதிக் கூறியது.