பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

குடி:

நாரா:

சேவ:

(பலதேவன் காதில்)

ஒளித்ததிங் குணர்வனோ? ஓ! பல தேவ! ஒருதின மேனும் பொருதுளேன் உம்முடன். கருதுமின் என்னவ மானமுஞ் சிறிதே. 190 உரியதே எமக்கது. பெரிதன் றுயிரும்;

குடி:

நாரா:

(தனதுள்)

277

(யாவரும் கவனமாய்க் கேட்க)

எரியிடு வானோ இல்லிடை? ஐயோ!

அத்தனை அன்புநீர் வைத்துளீர் ஆயின் என்மொழி தனக்குநீர் இசைமின், எனக்காத் தீதே ஆயினும் செமித்தருள் புரிமின்!

சேவ:

195 யாதே ஆயினும் சொல்லுக!

நாரா:

செமித்து

சொல்லுதும்!

போர்க்களத் துற்றவை யார்க்கும் வெளிப்படை. ஊர்ப்புறத் தின்னம் உறைந்தனர் பகைவர். நாற்புறம் நெருப்பு; நடுமயிர்த் தூக்கின்

மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி நிலைமை. 200 இதனிலும் அபாயமிங் கெய்துதற் கில்லை. நுந்தமிழ் மொழியும் அந்தமில் புகழும் சிந்திடும்; சிந்திடும் நுஞ்சுதந் தரமும்.

இத்தகை நிலைமையில் என்னைநும் கடமை? மெய்த்தகை வீரரே! உத்தம நண்பரே!

205 எண்ணுமின் சிறிதே! என்னைநம் நிலைமை! களிக்கவும் கூவவும் காலமிங் கிதுவோ? வெளிக்களத் துளபகை, வீண்கூக் குரலிதைக் கேட்டிடிற் சிறிதும் கேலியென் றெண்ணார்; கோட்டையுட் படைவெட் டேயெனக் கொள்வர்.

க்ஷமித்து, பொறுத்து.

198-199 அடிகள். நெருப்புக்கு மேலே மயிரில் கட்டித் தொங்கவிடப் பட்ட உரி, எந்த நிமிஷத்திலும் எரியும் நிலைமையில் இருப்பது போன்றது மனோன்மணியின் நிலைமை என்னும் கருத்துள்ளன. சிந்திடும் – சிந்திப்போகும்.