பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

சிறுபசி தாங்காச் சிறுமையர் பற்பலர்;

20

அறவழி இதுவென அறியாக் கயவர்;

25

30

பிறர்பொருள் வெளவியும் பிறவுயிர் கவர்ந்தும்

அலையும் தீமையர் அநேகர், அகப்படின்

மலைவற மரணமும் வெருவார் மான. கலக்கமொன் றின்றிக் கழுவே றிடுதல் புலப்படக் கண்டுளாய் இலக்கமின் முறையே. துரத்திடும் துயர்க்கணம் வருத்திடும் காலை மரித்தலோ அவையெலாம் சகித்தலோ தகுதி? தன்னுயிர் ஈவர் தக்கோர் சார்ந்த

மன்னுயிர் காத்திடு மார்க்கமற் றஃதேல். வார்கடல் முகட்டில், மாநிதி வழிஞர்

ஆர்கலன், அலையெறி புயல்கால் ஆதியாற் சேர்திசை திரிந்து தியங்குமேல், மீகான் களமும் காலமும் கருதித் தனக்குறு தளர்வுபா ராட்டுதல் தவிர்த்து, சாய்ந்து,மற் 35 றெதிருறு காற்றிற் கிசைவுற வதிந்து, தன்றிசை செல்லத் தக்ககால் வரும்வரை சென்றொரு கரைசேர்ந் தொன்றுவ னல்லால், உவப்புறு நிதிகெட உழையுளார் களும்பரி

தவித்திட மரக்கலம் துறப்பனோ சாற்றாய். 40 தக்கோர் செயலெலாம் தமக்கா அலவே! முக்கியம் புகழோ தக்கவுன் கடமையோ? அதனால் ஜீவக! அகற்றந் நினைப்பு.

மதிகுலம் வந்த மதிவலோர் பலரும் செலாவழி நின்திமில் செலுத்தினை; தீங்காய் 45 உலாவிய சுழல்காற் றோடொரு சுழியிடைப் பட்டனை; நம்பிய பாய்மரம் பழுது.

கயவர் - இழிந்த குணமுள்ளவர். மான - போல, ஒப்ப. இலக்கமில் - கணக்கற்ற. துயர்க்கணம் -துன்பமாகிய கூட்டம். (கணம் - கூட்டம்.) வார்கடல் முகட்டில் - பரந்த கடகலங்குமானால். மீகான் - மிகாமன், கப்பலோட்டி. கால் - காற்று. திமில் - மரக்கலம், படகு. சுழல்காற்று -(இங்கு) பகைவர். சுழி - ஆபத்து. பாய்மரம் -அமைச்சனாகிய குடிலன்.