பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

சுந்:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

கால கதிக்கநு கூலமாய் நவீனச்

70

சீர்பல திருத்தி ஓரியல் புதிதா

75

80

நாட்டித் தமது நாட்டுளோர் சுகம்பா

ராட்டிலரேல் அவ ராண்ட நாட்கெல்லை

காட்டுமோ கொடிய காலக் கரப்பே!

இவ்வழி தனக்கெனத் துணிந்ததோர் இயல்பே

அவ்வர சனுக்காம் யாக்கை. அஃதின்

அழிவே யவன தொழிவாம். அதனால்

எல்லாம் அறிந்த இறைவ! இவ் விடத்தியான் பல்லா யிரநாட் பரிவுடன் உழைத்தே

அமைத்தவிப் புரியும் சமைத்தவிவ் வரணும்

நன்றே ஆயினும் ஆகுக: அன்றிப்

பொன்றினும் பொன்றுக: பொறித்தவென் அரசியல் மற்றவை தம்மொடு மாண்டிடும்: மாண்டபின் அற்றதோர் கவந்தம் அமர்க்களத் தாடும்

பெற்றிபோல் மூச்செறி பிணமா யானும் 85 நடித்தலோ உன்திரு வடித்தா மரையைப் பிடித்ததற் கழகாம் பேசாய் விடுத்தே!

எடுத்ததன் முயற்சி யாதே யாகுக! முடித்திடு முன்ன ரடுத்ததன் மதியால் தீங்கெனத் தேர்ந்திடி னாங்கவற் றுட்பின் 90 வாங்கலே யார்க்கும் ஆம்பணி யென்ப. தீமைகை விடற்கு வேளைசிந் திப்போர் சேய்மை உனிமனை திரும்பார் ஒப்பர். ஆதலால் ஜீவக! தீதென வருதற்

கியாதோர் ஐயமும் இலைநீ தொடரியல்

95 எனவின் றெய்தி யவற்றால் உனது

காலக் கரப்பு காலத்தினால் ஏற்படும் மறைப்பு. பொன்றினும் அழிந்தாலும். பொறித்த - நிறுவிய. அற்ற தலையற்ற. கவந்தம் - தலையில்லாத உடம்பு; போர்க்களத்தில் தலைவெட்டப்பட்ட உடம்பு. தலைவெட்டப்பட்ட போர்வீரரின் உடம்பு (கவந்தம்) சில நேரம் போர்செய்வதும் உண்டு. பெற்றி போல் - தன்மைபோல. உனி - உன்னி, நினைத்து. தொடரியல் என சங்கிலித் தொடர்போல.

-