பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

285

ஜீவ:

சுந்தர:

மனத்திடை மயக்கற மதித்துளை ஆயின், ஒழுங்கா யிவையெலாம் ஒழித்தியான் குறித்த மருங்கே அணைந்து வாழலே கருமம். வேறிலை தேறு மார்க்கம்.

100 கூறுதி அதனால் உன்மனக் கோளே. ஐய!யான் உரைப்பதென்? அடுத்தவை

(இவையெலாம்)

கைவிடில் என்னுயிர் கழியும், அதனில் இன்றியான் பட்ட இகழ்ச்சி முழுதும்

பொன்றிடப் பொருதுபின் பொன்றுதல் அன்றோ

105 சிறப்பது செப்புதி! சிறியேன் ஒருசொல்

மறுத்தது பொறுத்தருள் மாதவக் கொழுந்தே!

சங்கரா! சற்றே தாதான் மியபலம்!

வெங்கரா பிடித்தவை விடினும் விடுமே! நல்லது ஜீவக! நண்டெனும் புல்லிய

110 அற்பமாம் சிற்றுயிர் அரியதன் உடலையும் பிற்கிளைக் கிரையென வீந்தவை பேணல் கண்டும் புகழிற் கொண்டனை பிராந்தி.

இவ்வுயி ரியலுல கியற்கையென் றெண்ணினேன். செவ்விதின் நின்னிலை தேர்ந்தபின் ஐயம்

115 வருவது. அதனால், மதிகுலம் வந்த ஒருமலர் நின்னுழை உள்ளது; தமிழர் ஆவோர் யார்க்கும் அஃதுரித் தாம்;நீ காவா யாகிற் காப்பதெம் கடனே.

2

மருங்கு - இடம். மனக்கோள் மனத்திற் கொண்டது தாதான்மியம் ஒன்று மற்றொன்றாதல். செயற்கை வாசனை என்பது பொருள். குடிலனோடு பழகியதனால் ஏற்பட்ட குணம் என்பது பொருள். வெம்கரா - கொடிய முதலை.

அடி 108. முதலைப்பிடி என்பது கருத்து. "மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்பது பழமொழி.

109 - 111 அடிகள், நண்டு குஞ்சகளை ஈன்றவுடன் செத்துத் தன் உடம்பையே குஞ்சுகளுக்கு உணவாக அளிக்கிறது என்பது கருத்து. பிராந்தி – மயக்கம். ஒருமலர் - ஒரு பூ; என்றது மனோன்மணியை.