பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

சுந்:

145 நல்லது! முகமன் நவின்றனை. நிற்க.

சொல்லிய சுருங்கை உனக்குமிவ் விடுக்கணில் உதவுமோ அன்றோ உரைக்குதி விரைந்தே.

ஜீவ:

சுந்தர:

ஜீவ:

அடியேன் ஆசை திருவடி அறியும். கடிபுரி விடிலுயிர் நொடியுமிங் கிராது.

150 பாண்டியர் குலமெனும் பாற்கடல் உதித்த காண்டகு கன்னியை இவ்வழி உன்திரு உளப்படி கொடுபோய் அளித்தரு ளுதியேல், இந்துவின் குலமெனும் முந்திய பெயர்போய்ச் சுந்தரன் குலமெனச் சந்ததம் வழங்கும். 155 நீங்கா திதுகா றென்னுளம் நிறைந்த தாங்காப் பெருஞ்சுமை தவிர்தலால் யானும் ஒருமனம் உடையனாய் மறலியும் வெருவ ஆற்றுவன் அரும்போர். அதனிடை யமபுரம் ஏற்றுவன் எங்குலம் தூற்றிய சேரனை; 160 வென்றிடின் மீளுவன். அன்றெனிற் பண்டே அனையிலாத் தனையளுக் கம்மையும் அப்பனும் தயாநிதி! நின்றிருச் சரணமே என்ன வியாகுல மறவே விடுவனென் உயிரே. விடுகிலை, ஆகினும் வெளிக்கடல் ஓட்டம், 165 நடுநிசி நாமினி வருகுதும். கொடிய

கடிபுரிக் கனலிடைக் காய்ந்திடும் உன்றன் சிறுகொடி மறுவிடம் பெயர்த்துதும், சிறந்த அந்தமில் செழியரைத் தந்திட உரித்தே. (எழுந்து)

கட்டளைப் படியே? கட்டிய கற்படை 170 கண்டிட ஆசையொன் றுண்டடி யேற்கு.

287

அளித்தருளுதியேல் - காத்தருளினால். சந்ததம் எப்பொழுதும். மறலி – யமன். சிறுகொடி - சிறிய பூங்கொடி போன்ற மனோன்மணி.