பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

29

செய்திகளை முத்தமிழ்ப் பேராசிரியர் உயர்திரு. விபுலாநந்த அடிகளார் இயற்றியுள்ள மதங்க சூளாமணி என்னும் நூலிலும், திரு. பரிதிமாற் கலைஞன் அவர்கள் இயற்றியுள்ள நாடகத் தமிழ் என்னும் நூலிலும் கண்டுகொள்க.)

"

பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள், மேலே சொல்லிய நாடக அமைப்பு முறைகளைப் பின்பற்றித் தமது மனோன்மணீய நாடகத்தைச் சுவைபடச் செம்மையாக நன்கு எழுதியுள்ளார்கள். ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் நாடகக் கலைஞர் எழுதியுள்ள நாடக அமைப்பைப் பின்பற்றி இவரும் எளிய ஆசிரியப்பாவினால் இந் நாடகத்தை இயற்றி யுள்ளார்; இடையிடையே வேறுவகைப் பாக்களையும் இடத்திற்கேற்ப அமைத்துள்ளார்.

தமிழ் மரபுப்படி இயற்றிய இந்த நாடக நூலிலே புராணக் கதைக் குறிப்புக்களும், புதிய சயன்ஸ் என்னும் மேனாட்டுச் சரித்திரக் கருத்துக் களும், தமிழ், ஆங்கிலம், மலையாளம் என்னும் மும்மொழி களில் வழங்கும் பழமொழிகளும் இடம் பெற்றுள்ளன. நூலாசிரியர் வாழ்ந்தது மலையாள நாடாகலின் சில மலையாளச் சொற்களும் இதில் இடம் பெற்றுள்ளன. தமிழில் வழங்காத வடமொழிச் சொற்கள் புதுமுறையாக வழங்கப்பட்டுள்ளன. திருக்குறளும், திருவாசகமும் இவர் போற்றிப் பயின்ற தனி நூல்கள். ஆகவே, திருக்குறளும், திருக் குறளின் சொற் களும் சொற்றொடர்களும், திருவாசகத்தின் சொற்களும் சொற்றொடர் களும் இந்நூலில் ஆங்காங்கே ஆளப்படுகின்றன.

வியஞ்சனம், க்ஷேமம், வாயசம், சம்போ சங்கர அம்பிகாபதே, தயாநிதே, கிரகித்தனர்,வியர்த்தம், பிசிதமரம், பாக்கியசிலாக்கியன், சுதந்தர பங்கர், க்ஷேமம், நிசிதவேலரசாடவி, உசிதம், அரகர குரு கிருபாநிதே, சுவானம். தனுகரணம், பிரணவ நாதமே தொனிக்கும். அந்நியோந்நிய சமாதானச் சின்னம், உத்தமோபாயம், இராச்சியபரண சுதந்திரம், விளம்பனம், பச்சாதாபப்படுத்துவம், யதார்த்தம், பிரபுத்துவம், கிருபணன், ஏகாந்தப் பெருங் ககனம், வேஷ ரகசியம், அகோராத்திரம், பஞ்சாசத் கோடி, பிரத்தியக் பிரபோதயம், கரதலாமலகம், சுதேசானு ராகம், துவாதசாந்தம், தாதான்மியம், குணப் பிரதமம் முதலியன இவர் ஆளும் வடமொழிச் சொற்கள்.