பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

66

299

'அரசே! தங்களிடம் ஒரு வார்த்தை சொல்ல வந்தேன். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல தாங்கள் எதிர்ப்பட்டீர்கள் !” என்றான் குடிலன்.

தமன்.

66

“வந்த காரியம் என்ன? விரைவில் சொல்?" என்றான் புருடோத்

“அரசே! தங்கள் புகழ் உலகமெங்கும் பரவியுள்ளது. எங்கள் நாட்டையும் தாங்களே அரசாள்வது தகுதி. இன்று நடந்த போரில் மன மில்லாமலே நான் போர் செய்தது தாங்கள் அறிந்ததே. மக்கள், தங்கள் புகழை எண்ணித் தங்களையே அரசராக ஏற்கவிருக்கின்றனர். ஆனால், பாண்டியன் அவர்களைப் போர் செய்யத் தூண்டுகிறான்” என்றான்.

குடிலன், சூதாக ஏதோ கருதுகிறான் என்று அறிந்த சேரன், “நல்லது! அதனால் உனக்கு வேண்டியது என்ன? சொல்”என்றான். குடிலன் கூறுகிறான்: “ஆண்டகையே! போரில் மாண்டவர் போக, மீண்டவர் உயிரையேனும் காத்தருள வேண்டும். வீணாக மக்கள் மாண்டுபோனது மனத்தைத் துன்புறுத்துகிறது. மற்றவர்களை யெல்லாம் போரில் மடியாதபடி காத்தருள வேண்டும்!”

என்

“உன் அரசனிடம் ஏன் இதைச் சொல்லவில்லை?” என்று கேட்டான் புருடோத்தமன்.

“சொல்லிப் பயன் என்ன? அவர் சொல் புத்தியும் கேளார். அருள் உள்ளம் இல்லாதவர். இன்று மாலையில் தாங்கள் விட்ட தூது வார்த்தையையும் ஏற்றுக்கொண்டாரில்லை. மக்களைப் போர்க் களத்தில் அனுப்பிக் கொன்று நாட்டைச் சுடுகாடாக்கப் பார்க்கிறார். அடியேனுக்கு ஒரு வார்த்தை சொன்னால், பாண்டியனையும் கோட்டையையும் ஒரு நொடியில் தங்கள் வசம் ஒப்புவிக்கிறேன்.

99

இதைக் கேட்ட சேரன், 'பாதகன்! விசுவாச காதகன்!' என்று தனக்குள் எண்ணிக்கொள்கிறான்.

குடிலன் மேலும் தொடர்ந்து சொல்லுகிறான் : “அரசே பாண்டிய அரசன் தங்கள் கைவசமானால், அங்குள்ளவர் ஒருவரும் தங்களை எதிர்க்கமாட்டார்கள். திருநெல்வேலி தங்களுக்குரிய தாய்விட்டால் மதுரையும் தங்களுக்குக் கீழ்ப்பட்டுவிடும். பாண்டிய நாடு தங்கள் அடிக்கீழ் ஒதுங்கும். அரசர்பெரும! அடியேனுக்கு அரச பதவி மட்டும்