பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

வாணி, “அம்மணி! தாங்கள் கனவு கண்டு காதலித்த அவரை அவர் யாராயினும் ஆகுக - அவரைத் தாங்கள் திருமணம் செய்யும் நாளே நான் திருமணம் செய்யும் நன்னாள். அதுவரையில் நான் மணம் செய்யேன். தங்களிடம் பணி விடை செய்துகொண்டிருப்பேன்" என்றாள்.

“வாணி ! நீ சொல்வது பேதைமை. என் மணம் இன்னும் அரை நாழிகையில் நடக்கப்போகிறது. இதற்குள் நான் கனவிற் கண்ட நாயகன் எப்படி வரப்போகிறார்? நீ என்னிடம் கொண்டுள்ள அன்பினால் இவ்விதம் கூறுகிறாய்!" என்றாள் மனோன்மணி.

66

கடவுள் இல்லை என்றால் இப்படி எல்லாம் நடக்கட்டும். உண்டு என்றால் அவர் திருவருள் கிடைக்கட்டும்” என்றாள் வாணி.

மூன்றாம் களம்

அரண்மனையில் மண மண்டபத்தில் நள்ளிரவில் பட்டம் பகல் போல விளக்குகள் வெளிச்சந் தருகின்றன. மண்டபம் அலங்கரிக்கப் பட்டு அழகாகக் காணப்படுகிறது. வீரர்களும் முக்கியஸ்தர்களும் கூடியிருக்கின்றனர். மண்டபத்தில் இரண்டு திரைகள் காணப் படுகின்றன. ஒரு திரை மணமகளுக்காக; மற்றொரு திரை, சுரங்க வாயிலை மறைப்பதற்காக. பாண்டியன் மண்டபத்தில் நுழைகிறான். அவனைப் பின்தொடர்ந்து சுந்தர முனிவர், கருணாகரர், நிஷ்டாபரர், பலதேவன், நடராஜன், நாராயணன் முதலியோர் வருகின்றனர். அரசன் ஆசனத்தில் அமர்ந்து எல்லோரையும் அமரும்படி கூறுகிறான். அமைச்சனாகிய குடிலன் அங்கு இல்லாதது கண்டு, "உம்முடைய தந்தையார் இன்னும் இங்கு வராதது என்ன?” என்று வியப்புடன் பலதேவனைக் கேட்கிறான்.

“மாலையில் அவரைப் பார்த்தேன்; தனியே போனார் என்று கூறுகிறார்கள்" என்றான் பலதேவன்.

“பாருங்கள், குடிலர் படும்பாடு ! எப்பொழுதும் நம் காரியமாகவே கண்ணாயிருக்கிறார். நமது காரியமாகத்தான் அவர் போயிருப்பார். இப்படி உழைப்பவர் எந்த உலகத்திலும் இல்லை” என்று கூறி, முனிவரைப் பார்த்து, “அடிகாள்! முகூர்த்த வேளை வந்ததோ? தொடங்கலாமோ?" என்று கேட்கிறான்.