பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

போர்க்களம் சென்று போர் செய்து நமது மானத்தைக் காப்போம்!" என்று கூறி, சகடரை நோக்கி, “ உமது கருத்தைக் கூறும்” என்று கூறினான்.

وو

"எல்லாம் சரிதான் ; மணமகன் அரசகுலம் அல்ல... அது தான்...' என்று இழுத்தார் சகடர். “குலத்தைப்பற்றி யோசிப்பதைவிட குணத்தைப் பற்றித்தான் கருதவேண்டும்” என்றான் அரசன். “அரசே ! மனிதரால் ஆவது ஒன்றுமில்லை. எல்லாம் ஈசன் செயல்” என்றான் நாராயணன்.

சகடரும் மற்றவர்களும் ‘சரிசரி' என்று கூறிச் சம்மதம் தெரிவித்தனர். அரசன், இளவரசியை மண மண்டபத்தின் திரைக்குள் வரும்படி அழைப்பித்தான். மனோன்மணி, வாணிவாணி கடவுள் வாழ்த்துப் பாடினாள்.

சுந்தரமுனிவர், "மனோன்மணீ! இங்கு வருக! மாலையைக் கையில் டு. உன் மனதை இறைவன் அறிவான். அவன் திருவருள் இன்னமும் உன்னைக் காக்கும்" என்று கூறினார். மனோன்மணி மண மாலையைக் கையில் ஏந்தி, வாடிய முகத்துடன் உயிர் இல்லாப் பாவை போல திரைக்கு வெளியே வருகிறாள். அதேசமயம் எதிரிலிருந்த திரைச் சீலையி லிருந்து புருடோத்தமன் திரைக்கு வெளியே வருகிறான். தான் கனவில் கண்டு காதலித்த உருவமே அது என்று அறிந்து வியப்பும் மகிழ்ச்சியும் பொங்க மனோன்மணி அங்கு விரைந்து சென்று மாலையைப் புருடோத்தமன் கழுத்தில் இடுகிறாள். புருடோத்தமனும், தான் கனவில் கண்டு வரும் பெண் இவள் என்று அறிந்து வியப்படைகிறான்.

எதிர்பாராத இந்நிகழ்ச்சியைக் கண்டு எல்லோரும் அதிசயிக்

கின்றனர்.

சுந்தரமுனிவர், “மங்கலம் உண்டாகுக!” என்று மணமக்களை

வாழ்த்துகிறார்.

பலதேவன், “பிடியுங்கள் அவனை! கொல்லுங்கள்!” என்று கூவுகிறான். சுந்தர முனிவர் அவர்களைத் தடுத்து அமைதியுண்டாக்கு கிறார். சேரன் சேனாபதி அருள்வரதனும் அவனுடைய வீரர்களும், புருடோத்தமனையும் மனோன்மணியையும் சூழ்ந்து நின்றுகாவல் புரிகின்றனர். எல்லோரும், “பாதகன்! படையுடன் இங்கேயும் வந்தான் என்கின்றனர். அருள்வரதன், விலங்குடன் தலைகுனிந்து நிற்கும் குடிலனைச் சுட்டிக்காட்டிக் கம்பீரமாக, “இதோ உங்கள் பாதகன்!” என்று கூறினான்.