பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

305

ஜீவகன், “குடிலரே ! என்ன இது ! அடிகாள் ! இது என்ன சூது

என்றான்.

"பொறு ! பொறு ! விரைவில் அறிவோம்” என்றார் முனிவர். புருடோத்தமன் பேசுசிறான் : “நாம் சூது ஒன்றும் செய்யவில்லை. சூது செய்தவன் உம்முடைய அமைச்சன் ! சுரங்க வழி இருப்பதை என்னிடம் கூறி இவ்வழியாக வந்து உமது நகரத்தைப் பிடிக்கும்படி எம்மை அழைத்தான். உமது அரசையும் நாட்டையும் தனக்குக் கொடுக்கும்படி என்னைக் கேட்டான். இவனுடைய சூதையும் துரோகத்தையும் உமக்குச் சொல்லி உம்மைத் தெளிவிக்கவே இவனைச் சுரங்க வழியாக நாம் அழைத்து வந்தோம். வந்த இடத்தில், மண நிகழ்ச்சியைக் கண்டோம். இளவரசியை எதிர்பாராதவிதமாகப் பெற்றோம். இனி உமது விருப்பம், சென்று வருகிறேன். உமக்கு விருப்பமானால் போர்க்களத்தில் சந்திப்போம்."

ஜீவகன், “குடிலரே! இது உண்மையா! சொல்லும்!” என்றான். குடிலன் பேசாமல் தலைகுனிந்து நிற்கின்றான்.

“ஏன் மௌனம் ? குடிலரே! உண்மையைக் கூறும்!” என்றான் நாராயணன். குடிலனைப் பார்த்து எல்லோரும், “அட பாவீ!”என்றனர்.

சுந்தரர், “விடுங்கள்! இப்போது ஏன் விசாரணை ? எல்லாம் கடவுள் திருவருள்... அரசே! மகளையும் மருகனையும் வாழ்த்தும்” என்றார். எல்லோரும் மணமக்களை வாழ்த்துகின்றனர்.