பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

புரு:

குடி:

புரு:

குடி;

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

சிரமேற் சுமந்துன் முரசா ரனந்தைக் 140 கோயில் வாயிலிற் கொணர்ந்துன் திருவடி கண்டுமீள் வதுவே கதியடி யேற்காம்.

பண்டிரா கவன்றன் பழம்பகை செற்று வென்றதோ ரிலங்கை விபீஷணன் காத்தவா றின்றுநீ வென்றநா டினிதுகாத் திடுவேன்.

145 சமர்த்தன் மெத்தவும்! அமைத்ததந் திரமென்?

அரசன தந்தப் புரமது சேர

யாவரு மறியா மேவருஞ் சுருங்கை

ஒன்றுளது. அவ்வழி சென்றிடி லக்கணங் கைதவன் கைதியா யெய்துவ னுன்னடி.

150 2600T GOOLD?

(சேவகரை நோக்கி) யாரது?

உதியன் கண்முன்

மெய்ம்மை யலாதெவர் விளம்புவர்?

(அருள்வரதன் வர)

அருள்:

அடியேன்!

புரு:

கைத்தளை காற்றளை கொடுவா நொடியில்.

(அருள்வரதன் போக)

(குடிலனை நோக்கி)

குடி:

எத்திசை யுளதுநீ யியம்பிய சுருங்கை?

அணிதே! அஃதோ! சரணம் புகுந்த 155 எளியேற் கபய மியம்புதி யிறைவ!

முரசுஆர் - முரசு ஒலிக்கின்ற. அனந்தைக் கோயில் - திருவனந்த புரத்து அரண்மனை. இராகவன் - இராமன். செற்று அழித்து. 142 - 144 அடிகள். இராமன் இலங்கையை வென்று விபீஷணனுக்கு முடிசூட்டியதுபோல குடிலனாகிய எனக்கு முடிசூட்டுவையாயின் நன்றாக அரசாள்வேன் என்று குடிலன் கூறியது. மேவரும் அடைதற்கருமையான. கைதவன் பாண்டியன். கைதியாய் சிறையாளனாக. (கைதி – இந்துஸ்தானிச் சொல்). தளை - விலங்கு.