பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

2-ம் தோழி: முதற்றோழி:

2-ம் தோழி: முதற்றோழி:

2-ம் தோழி:

மனோ:

70

என்செய் கின்றனள் இப்போது ஏழை?

வஞ்சியிவ் அறையே வருவள் வல்லை! ஏதோ எழுது கின்றனள். வாணி

கோதிநின் றாற்று கின்றனள் கூந்தல்.

நீரா டினளோ இந்நிசி?

ஆம்!ஆம்!

எழுந்து வாசநீ ராடி முன்சுரத்

தழுந்திய அன்றுதான் அணிந்தவெண் பட்டினைக்

கொடுவரப் பணித்தங் கதுவே தரித்து

நெடுநுதல் திலகமும் நேர்படத் தீட்டி,

அன்றிரா அணிந்தமுத் தாரமும் அணிந்து, 75 நின்றுதன் நிலையெலாம் ஆடியில் நோக்கி, 'நன்றோ நங்காய்! வாணி! நவிலுதி! அன்றுபோல் அன்றோ இன்றென் நிலைமை!’ என்று சிறுமுறு வலித்தனள். என்சொல! உருவமும் உடையும் உரையும் நடையும் 80 சருவமும் பாவனை பண்ணியும்...

அஃதோ!

319

(அழ)

(மனோன்மணியும் வாணியும் வர)

வந்தனள் காணுதி. வாணியும் பின்னுளள். மறைகுவம் அவ்வறை. வருகஇவ் வழியே!

(தோழிமார் போக)

எந்தைபோல் தயாநிதி எங்கணும் இல்லை. வந்தனம் வழங்கவும் வாய்கூ சுவதே! 85 ஏதோ ஒருவிதம் எழுதினேன் என்க!

வல்லை - விரைவில். வாசநீர் - மணமுள்ள நீர். முன்சுரத்து அழுந்திய அன்று - முன்னொருநாள் கனவு கண்டு சுரத்தினால் வருந்திய அன்றைய தினம். ஆடியில் - முகம் பார்க்கும் கண்ணாடியில்.