பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

வாணி:

90

மனோ:

95

வாணி:

மனோ: 105

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

வாணி!உன் மணத்திற் கிசைந்தான் மன்னன். காணா யீதோ அதற்குள கட்டளை.

(திருமுகங்காட்ட; வாணி வாசிக்க)

சொன்னேன் அன்றே வாணீ! முன்னமே அன்னை தந்தையர் அன்பறி யார்சிறார்.

இத்தரு ணத்தில் இதுவென்? அம்மணீ! சத்தியம். எனக்கிது சம்மதம் அன்று. நினைப்பரும் துயரில் நீயிவண் வருந்த எனக்கிது தகுந்தகும்! ஏதிது தாயே!

உன்மனப் படியெலாம் உறுங்காற் காண்குவம்.

என்மனப் படியெது? எனக்கொரு மனதோ? எந்தையின் மனப்படி என்மனப் படியே. வந்தஇச் சுரத்திடை மாண்டதென் சித்தம்

ஆயினும் அம்மா! யாரிஃ தறியார்? பாயிருள் தொகுதியும் பரிதியும் கொடிய 100 வெஞ்சினக் கழுகும் அஞ்சிறைக் கிளியும் பொருந்தினும் பொருந்தீர். ஐயோ! இத்தகைப் பெருந்துயர்க் கெங்ஙனம் இசைந்தனை என்க. என்னையுன் நினைவோ! என்னையும் துணிபோ! இன்னன் மகிழ்ச்சியில் என்மண மேகுறை!

வருந்தலை வாணி! வா வா. இன்னும் தெரிந்திலை, ஐயோ! சிறுமியோ நீயும்?

உண்மையான் உரைத்தேன். உணருதி உறுதி. என்மனம் ஆரவே இசைந்தேன். மெய்ம்மை. ஏதென எண்ணினை இவ்வுயிர் வாழ்க்கை?

110 தீதற இன்பம் துய்ப்பநீ எண்ணில்

ஈதல அதற்காம் உலகம். இமையவர்

வாழ்க்கையி லுந்துயர் வந்துறும் எனிலிவ்

(அழ)

திருமுகம் – கடிதம். இது – வாணிக்கும் நடராஜனுக்கும் நடக்கப் போகிற திருமணம். துயரில் - பலதேவனை மனோன்மணி மணக்கப்போகும் துன்பத்தில்.