பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

ஜீவ:

நாரா:

ஜீவ:

சுந்:

புரு:

50

55

இருமிரும் நீரும். எங்கே கினும்நம் காரிய மேயவர் கருத்தெப் பொழுதும். (நாராயணனை நோக்கி)

பாரீர் அவர்படும் பாடு.

பார்ப்பேன்!

சத்தியம் சயிக்குமேற் சாற்றிய படியே!

இத்தகை உழைப்போர் எப்புவ னமுமிலை. எண்ணிநிச் சயித்த இத்தொழில் இனியாம் பண்ணற் கென்தடை? சுவாமி! அடிகள் தந்தநன் முகூர்த்தம் வந்ததோ?

வந்தது.

327

(புருடோத்தமனும், குடிலனும் அருள்வரதன் முதலிய

மெய்காப்பாளருடன் கற்படை வழி வர)

(கற்படையில் அருள்வரதனை நோக்கி)

நின்மின்! நின்மின்! பாதகன் பத்திரம்! என்பின் இருவர் வருக.

(தனதுள்)

இதுவென்?

60 இந்நிசி எத்தனை விளக்கு! ஏதோ!

65

மன்னவை போலும்! மந்திரா லோசனை! இவர்சுந் தரரே! அவர்நட ராஜர்! இவர்களிங் குளரோ! எய்திய தெவ்வழி? இத்திரை எதற்கோ? அத்திரை எதற்கோ? இத்தனை கோலா கலமென் சபைக்கு? மாலையும் கோலமும் காணின் மணவறை போலாம். அறிந்தினிப் போவதே நன்மை. மந்திரம் ஆயின் மற்றதும் அறிவோம். இந்தநல் திரைநமக் கெத்தனை உதவி!

(திரைக்குப் பின் மறைந்து நிற்க)

மந்திராலோசனை இரகசிய ஆலோசனை.