பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

2-ம் படை: குடிலனை அறியுமே குவலயம் அனைத்தும்.

ஜீவ:

புரு:

ஜீவ:

அறிந்திடில் இறும்பூ தணையார் யாவர்? மதியுளார் யாரவன் மதியதி சயித்திடார்? நெஞ்சுளார் யாரவன் வன்திறற் கஞ்சார்? 105 யார்வையார் அவனிடத் தாரா ஆர்வம்?

உண்மைக் குறைவிடம்; திண்மைக் கணிகலம். சத்திய வித்து: பத்தியுன் மத்தன்.

ஆள்வினை தனக்காள்; கேள்விதன் கேள்வன். ஏன்மிக? நமர்காள்? இந்நடு நிசியிலும்

110 யானறி யாதுழைக் கின்றனன் எனக்கா. நன்றே இங்கவன் இலாமையும் : அன்றேல் தற்புகழ் கேட்க அற்பமும் இசையான். (தனதுள்)

எத்தனை களங்கமில் சுத்தன்! கட்டம்!

பற்பல பாக்கியம் படைத்துளர் பண்டுளோர். 115 ஒப்பரும் அமைச்சனை இப்படி ஒருவரும்

முன்னுளோர் பெற்றிலர்; பின்னுளார் பெறுவதும் ஐயமென் றுரைப்பேன். அன்னவன் புதல்வன் மெய்ம்மையும், வாரமும் வீரவா சாரமும், பத்திசேர் புத்தியும், யுத்திசேர் ஊக்கமும்

120 உடையனாய் அடையவும் தற்பிர திமைபோல், இனியொரு தலைமுறை தனிசே வகஞ்செய இங்குவீற் றிருந்திலன் ஆயின், எமர்காள்! எங்குநீர் கண்டுளீர் இச்சிறு வயதிற்

2-ம் படை:125

ஜீவ:

பலதே வனைப்போற் பலிதமாம் சிறுதரு? இலையிலை எங்கும்! இவர்போல் யாவர்! எனதர சுரிமையும் எனதர சியல்பும்

தமதார் உயிர்போல் தாம்நினைத் திதுவரை எவ்வள வுழைத்துளார் இவ்விரு வருமெனச்

329

வன்திறல் - மிகுந்த வல்லமை. திண்மை - பலம், வலி ஆள்வினை அன்பு. அடையவும் - முழுவதும். பலிதம்

முயற்சி. வாரம்

பலன் தருவது.