பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

341

தார். அவர், கங்கையாறு ஓடிவருவதைக் கண்டு. அது யாக குண்டத்தில் புகுந்து யாகத் தீயை அழித்துவிடும் என்று அஞ்சி. கங்கைநீர் முழுவதையும் குடித்துவிட்டார். அப்போது பகீரதனும், தேவர்களும் முனிவர்களும் கங்கையாற்றை வெளியே விடும்படி சந்நுவை வேண்டிக்கொண்டனர். இவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சந்நு முனிவர். கங்கையாற்றைத் தமது காதின் வழியாக வெளியே விட்டார். இதனால், கங்கை யாற்றுக்குச் சாநுவி என்னும் பெயர் ஏற்பட்டது.

காக்கை காவிரியை உண்டாக்கிய கதை

பக்கம் 18. வாயசம் கவிழ்த்த பொன்னி

இந்திரன் பூஞ்சோலை அமைக்க விரும்பினான். சோலைக்கு நீர் வேண்டுமாகையால், அவன் விநாயகக் கடவுளை வழிபட்டான். அவ்வமயம் பொதிகை மலையை நோக்கிப் போய்க்கொண்டிருந்த அகத்திய முனிவர், கமண்டலத்தைக் கீழே வைத்தபோது விநாயகர் காக்கை வடிவமாகச் சென்று கமண்டல நீரைக் கவிழ்த்துவிட்டார். அந்நீர் பெருகிக் காவிரியாறாகப் பாய்ந்தது.

மன்மதனை எரித்த கதை

பக்கம் 22

தாரகாசுரனை

அழிப்பதற்காக

முருகக்கடவுளை

உதவவேண்டும் என்று தேவர்கள் சிவபெருமானை வேண்டினார்கள். அப்போது சிவபெருமான் யோகத்தில் அமர்ந்திருந்தார். யோக நிஷ்டையைக் கலைத்துப் பார்வதி மீது இச்சை கொள்ளும்படிச் செய்ய தேவர்கள் மன்மதனை வேண்டினார்கள். மன்மதன் சென்று மலர்க்கணைகளைச் சிவபெருமான்மீது எறிந்தான். அவர் நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தார். மன்மதன் எரிந்து சாம்பலானான். மன்மதன் மனைவி இரதி தன் கணவனைப் பிழைக்கும்படி இரந்து வேண்டினாள். சிவபெருமான், மன்மதனை உயிர்ப்பித்து எழுப்பி, இரதிக்கு மட்டும் தெரியும்படியும் மற்றவர்களுக்குக் காணப்படாத படியும் அமைத்தார். ஆகவே, மன்மதன் அனங்கன் (உருவம் இல்லாதவன்) என்று பெயர் பெற்றான். அவன் ஐந்துவிதமான பூ அம்புகளை எய்து சிற்றின்ப உணர்ச்சியை மனிதர் உள்ளத்தில் ஊட்டுகிறான் என்பது புராணக் கதை.