பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342

பக்கம் 22

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

கடுவுண்ட கண்டர்

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது அக் கடலிலிருந்து சில பொருள்கள் தோன்றின. அவற்றுடன் நஞ்சும் தோன்றியது. நஞ்சைக் கண்டவுடன் அவர்கள் அஞ்சி ஓடினார்கள். சிவபெருமானிடம் சென்று பாற்கடலில் நஞ்சு வெளிப்பட்டதைக் கூறினார்கள். சிவபெருமான், ஆலால சுந்தரரை அனுப்பி நஞ்சைக் கொண்டுவரச் செய்து அதனைத் தமது வாயில் இட்டு விழுங்கினார். விழுங்கும்போது பார்வதியார், நஞ்சு உள்ளே போகாதபடி அவர் கழுத்தில் நிறுத்தினார். இதனால் சிவபெருமானுக்குக் கடுவுண்ட கண்டான் (கடு – விஷம்) என்றும், நஞ்சுண்ட கண்டன் என்றும், காள கண்டன், கறைக் கண்டன், நீலகண்டன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. அரிச்சந்திரன் கதை

பக்கம் 31

பொய் சொல்லா விரதத்தோடு வாழ்ந்த அரிச்சந்திரனைப் பொய்யனாக்க விசுவாமித்திரர் அவனுக்குப் பல துன்பங்கள் ஏற்படச் செய்கிறார். அரிச்சந்திரனிடம் பெரும்பொருளை யாகத்தின் பொருட்டு யாசித்துப் பெற்றுக்கொண்டு, அப்பொருளை அவனிடமே வைத்துப் போகிறார். பிறகு நாட்டியப் பெண்களை அனுப்பி அரசனிடமிருந்து அப்பொருள்களைத் தானமாகப் பெறும்படி செய்கிறார். பொருள் இல்லாத சமயத்தில் வந்து கேட்டு ஆட்சியைப் பெற்றுக் கொள்கிறார். இவ்வாறு பொருளையும் அரசையும் இழந்த அரிச்சந்திரன் கடைசியில் தன்னையும் தன் மனைவியையும் மகனையும் விற்கும்படியான இக்கட்டான நிலையடையும்படி செய்கிறார். கடைசியாகத் துன்பங்கள் நீங்கினார். சத்தியமே வெல்லும் என்பதை நிறுவினார்.

பக்கம் 31

இந்திரன் உருக்கரந்த கதை

சியவன முனிவர் இந்திரனுக்கு அவிர்ப்பாகம் கொடுக்காமல், அசுவினி தேவர்களுக்குக் கொடுப்பதைக் கண்டு இந்திரன் அம் முனிவர் மேலே வச்சிராயுதத்தை எறிந்தான். அவர் அவனைச் சபித்தார். அதனால் அவன் கடலில் ஒளிந்தான் என்பது ஒரு கதை.