பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

35

முனிவர் எழுந்தருளியிருப்பதை யுணர்ந்து ஜீவகன் அவரைத் தன் சபைக் கழைப்பித்து, தனது அரண்மனை கோட்டை முதலியன வற்றைக் காட்டி அவை சாசுவதம் என மதித்து வியந்துகொள்ள, அவ்விறுமாப்பைக் கண்ணுற்ற முனிவர், அவற்றின் நிலையாமையைக் குறிப்பாகக், கூறியும் அறியாதொழிய, அவன் குடும்பத்திற்கும் கோட்டை முதலியவற்றுக்கும் க்ஷேமகரமாகச் சில கிரியா விசேஷம் செய்யும் பொருட்டு அவன் அரண்மனையில் ஓரறை தம் சுவாதீனத்து விடும்படி கேட்டு, அதன் திறவுகோலை வாங்கிக்கொண்டு,தம் ஆச்சிரமம் போயினர். ஜீவக வழுதிக்குச் சந்ததியாக மனோன்மணி என்னும் ஒரே புத்திரிதான் இருந்தனன். அவள் அழகிலும் நற்குண நற் செய்கைகளிலும் ஒப்புயர்வற்றவள். அவளுக்கு அப்போது வயது பதினாறாக இருந்தும், அவள் உள்ளம் குழந்தையர் கருத்தும் துறந்தோர் நெஞ்சமும்போல யாதொரு பற்றும் களங்கமுமற்று நின்மலமாகவே யிருந்தது. அவளுக்கு உற்ற தோழியாக இருந்தவன் வாணி. இவள் ஒழுக்கம் தவறா உளத்தள்; தனக்கு நன்றெனத் தெள்ளிதில் தெளிந் தவையே நம்புந் திறத்தள்; அல்லனவற்றை அகற்றும் துணிபு முடையள். இவ் வாணி நடராஜனென்ற ஓர் அழகமைந்த ஆனந்த புருஷனை யறிய, அவர்களிருவர் உள்ளமும் ஒருவழிப்படர்ந்து காதல் நேர்ந்தது. அதற்கு மாறாக இவ் வாணியினது பிதா மிகப் பொருளாசை யுடையோனாதலால், குடிலனுடைய மகன் பலதேவன் என்னும் ஒரு துன்மார்க்கனுக்குத் தன் மகளை மணம்புரியில் தனக்குச் செல்வமும் கௌரவமும் உண்டாமென்ற பேராசை கொண்டு அவ்வாறே அரசன் அநுமதிபெற்று விவாகம் தடத்தத் துணிந்தனன். அதனால் வாணிக்கு விளைந்த சோகம் அளவற்றதா யிருந்தது. இச் சோகம் நீங்க மனோன் மணி பலவாறு ஆறுதல் கூறும் வழக்கமுடையவளா யிருந்தாள். இவ்வாறிருக்கும்போது முனிவர் கோட்டை காணவந்த நாளிரவில் ஈடுமெடுப்புமற்ற சேரதேசத் தரசனாகிய புருடோத்தமவர் மனைப் பூருவகரும பரிபாகத்தால் மனோன்மணி கனாக்கண்டு மோஹம் கொள்ள அவட்குக் காமசுரம் நிகழ்ந்தது. அச் சுரம் இன்ன தன்மைய தென்றுணராது வருந்தும் ஜீவகனுக்குத் தெய்வகதியாய்த் தம் அறைக்கு மறுநாட்காலமே வந்த முனிவர் மனோன்மணி நிலைமை காமசுரமே எனக் குறிப்பாலுணர்ந்து அவள் நோய் நீங்கு மருந்து மணவினையே எனவும், அதற்கு எவ்விதத்திலும் பொருத்த முடையோன் சேர தேசத்துப் புருடோத்தமனேயெனவும் அவ்வரசனது