பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் களம்

மனோன்மணீயம்

முதல் அங்கத்தின் விளக்கம்

ஜீவகன் என்னும் பாண்டிய அரசன் திருநெல்வேலியில் புதிதாக அமைத்த கோட்டையைப் பார்ப்பதற்காக இராஜ குருவாகிய சுந்தர முனிவர் எழுந்தருளுகிறார். அவரை வரவேற்க அரண்மனையில் ஆயத்தமாக இருக்கின்றனர். எழுந்தருளிய சுந்தரமுனிவரை அரசன் வரவேற்று ஆசனத்தில் அமரச் செய்து வணங்குகிறான். முனிவர் வாழ்த்தி ஆசி கூறுகிறார். பிறகு அரசன், மனோன்மணி, நகர மக்கள் முதலியவர்களின் க்ஷேமங்களை விசாரிக்கிறார். அரசன் ஏற்றவாறு விடைகூறியபின், தான் புதிதாக அமைத்த கோட்டையைப் புகழ்ந்து பேசி, கோட்டையை முனிவருக்குக் காட்டும்படி தன் அமைச்சனான குடிலனுக்குக் கூறுகிறான். பாண்டி நாட்டையும், பொதிகை மலையை யும், தாமிரபரணி ஆற்றையும், திருநெல்வேலியில் புதிதாக அமைந் துள்ள கோட்டையின் சிறப்புக்களையும் குடிலன் புகழ்ந்து பேசுகிறான். இவற்றை எல்லாம் கண்டும் கேட்டும் தெளிந்த முனிவர், குடிலன்மீது ஐயங்கொண்டு அரசனுக்கு ஏதோ ஆபத்து வர இருக்கிறது என்பதை உணர்கிறார். தனது ஐயத்தை முனிவர் அரசனிடம் குறிப்பாகக் கூறுகிறார். பிறகு, அரசகுமாரி மனோன்மணியைக் காணக் கன்னி மாடத்துக்குச் செல்கிறார். இவற்றையெல்லாம் கண்டும் கேட்டும் நின்ற நகர மக்கள் தமக்குள் உரையாடிக் கொள்கின்றனர். அமைச்சன் கோட்டையைப் புகழ்ந்து பேசியதைப்பற்றியும் முனிவர் குறிப்பாகக் கூறியதைக் கேட்ட அரசனும் அமைச்சனும் முகம் மாறியதையும் அரச குமாரி மனோன்மணியின் சிறந்த குணங்களையும் பற்றி நகர மக்கள் பேசுகின்றனர்.

இரண்டாம் களம்

அரண்மனையின் கன்னிமாடத்திலே அரசகுமாரி மனோன்மணியும், அவள் தோழி வாணியும் கழல் ஆடுகின்றனர். அவ் விளையாட்டின் போது காமதேவனுடைய இயல்பைப் பாடுகின்றனர். அப் பாட்டினிடையே,