பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

49

வாணி தன் காதலனாகிய நடராஜன் பெயரைத் தற்செயலாகக் குறிப்பிடுகிறாள். மனோன்மணி, நடராஜனுக் கும் வாணிக்கும் உள்ள காதலைப் பற்றி வினவுகிறாள். வாணி, தன் தாயும் தந்தையும் நடராஜனை மணம்செய்துகொள்ளக் கூடாதென்று தடுப்பதையும், அமைச்சன் மகனாகிய பலராமனை மணம்செய்து கொள்ளத்தன்னை வற்புறுத்துவதையும் தெரிவித்து மனம் வருந்துகிறாள். பலராமனையே வாணி மணந்துகொள்வதற்கு என்ன தடை என்று மனோன்மணி கேட்கிறாள். அதற்கு வாணி, காதலின் தன்மையை விளக்கித் தான் காதலித்த நடராஜனையே மணக்கப்போவதாகக் கூறுகிறாள். மனோன்மணி நகைத்து, காதல் என்பது பொய்க்கூற்று என்றும், தான் காதலில் அகப் படாமல் சுந்தரமுனிவர் வழியில் நின்று தவம் செய்யப்போவதாகவும் கூறுகிறாள். 'காதல் வயப்படுமுன் இவ்வாறு பேசுவது இயல்பு. நீயும் காதல் வலையிற் படும்போது காதலின் தன்மையை அறிவாய்' என்று று வாணி கூற, மனோன்மணி, ‘சுந்தரமுனிவர் அடுத்த அறையில் தங்கி அங்குச் சக்கரம் அமைக்கப் போகிறார். அவரிடம் அறையின் திறவு கோல் இருப்பதனால், அவர் அடிக்கடி வருவார். அவரிடம் ஞான வாசிஷ்டம் முதலிய நூல்களைக் கேட்டு வைராக்கியத்துடன் தவம் செய்வேன்' என்று கூறினாள். வாணி தன்னைப் பலதேவனுக்கு மணம் செய்விக்கத் தன் தந்தை அரசர் பெருமானின் சம்மதம் பெறப் போவதாகவும் கூறுகிறாள். தனக்கு நடராஜனையன்றி வேறொருவனை மணம்செய்துகொள்ள விருப்பமில்லை என்றும், தன் தாய் நடராஜனைத் தன் வீட்டுக்கு வரக்கூடாதென்று கட்டளையிட்டதாகவும், அமைச்ச னாகிய குடிலன் நடராஜனை ஊரைவிட்டுப் போகும்படி விரட்டுகிறா னென்றும் நடராஜனும் வாழ்க்கையை வெறுத்து மனம் கவல்கிறா னென்று கூறி வருந்துகிறாள். அவ்வமயம் செவிலித்தாயும் ஒரு தோழியும் வந்து மனோன்மணி நட்டு வளர்த்த முல்லைக்கொடி அரும்பு விட்டு மலர்ந்திருக்கிறது என்றும், அது அரசகுமாரியின் திருமணத்துக்கு அறிகுறி என்றும் கூறி அழைத்துச் செல்கின்றனர்.

மூன்றாம் களம்

ஜீவக மன்னனும், நண்பன் நாராயணனும், அமைச்சன் குடிலனும் கொலுமண்டபத்தில் அமர்ந்து உரையாடுகின்றனர். நமது கோட்டையை முனிவர் துச்சமாகப் பேசிய காரணம் என்னவென்று ஜீவகன் குடிலனை வினவ, இதுவே தகுந்தசமயம் எனக் கண்டு, குடிலன் இராஜ குருவின்மீது அரசனுக்கு வெறுப்பு உண்டாகும்படிப் பேசுகிறான்.