பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

51

இருக்கிறார். என்பது அச் செய்யுளின் கருத்து. ஆனால், அரசன் அதனையும் உணர்ந்து கொள்ளவில்லை. சகடர் நடராஜனைப் பித்தன் பேயன் வீணன் என்று கூறி, அவனுக்குத் தன் மகளை மணஞ் செய்விக்க விரும்பவில்லை என்று சொல்கிறார். அரசனும் வாணியின் காதலன் நடராஜனைப்பற்றித் தவறாக எண்ணுகிறான். குடிலனும் அதற்கு ஒத்து ஊதுகிறான். அரசன், வாணிக்கு அறிவு புகட்டிப் பலதேவனை மணஞ்செய்ய இசையுமாறு கூறுவதாக வாக்களிக்கிறான். சகடர் மகிழ்ந்து விடைபெற்றுச் செல்கிறார்.

அவ்வமயம், மனோன்மணியின் செவிலித்தாய் வந்து, மனோன் மணி உடல்நலமில்லாமல் இருப்பதைக் கூறுகிறாள். உணவும் உறக்கமும் இல்லாமல் தனக்குத் தானே ஏதேதோ பிதற்றுகிறாள் என்றும், மருந்தினால் தீராத புதுமையான நோயாக இருக்கிறதென்றும் தெரிவிக் கிறாள். அவளுக்கு இது வரையில் யாதொரு நோயும் வந்ததில்லையே, இது என்ன புதுமை என்று கூறி அரசன் கவலையடைகிறான். இதுதான் சமயம் என்று குடிலன், 'இது சுந்தரமுனிவரின் மந்திரச் செயலாக இருக்குமோ' என்று அரசனுக்கு அவர்மீது ஐயம் உண்டாகும் படி கூறுகிறான். அது தவறான ஐயம். முனிவர் மனோன்மணியிடத்தில் மிகுந்த கருணையுள்ளம் கொண்டவர். ஒரு யந்திரம் எழுதிவைக்க ஒரு அறை வேண்டும் என்று கேட்டார். ஒரு அறையைத் திறவுகோலுடன் அவருக்கு அளித்தோம். இந்நோயின் காரணம் தெரியவில்லை என்று கூறி அரசன் தன் மகள் மனோன்மணியைக் காணக் கன்னி மாடத்துக்குச் செல்கிறான். குடிலன், மங்கைப்பருவம் உள்ள மனோன் மணிக்குக் காமநோய் ஏற்பட்டுள்ளது என்பதை அறிகிறான். பிறகு அரசாட்சியை எவ்வாறு கைப்பற்றலாம் என்பதுபற்றிச் சிந்திக்கிறான். நான்காம் களம்

ஜீவகன் தன் மகள் மனோன்மணியின் நோய் இன்னதென்று அறியவில்லை. அதுபற்றி அவளை வினவுகிறான். மனோன்மணி தனக்கு ஒன்றும் நோய் இல்லை என்று கூறுகிறாள். அப்போது, அருகில் நின்ற வாணியிடம் அரசன் அவளுடைய திருமணத்தைப் பற்றிப் பேசுகிறான். நடராஜன் உதவாக்கறை; அவனை விட்டு, பலதேவனையே மணஞ் செய்துகொள் என்று கூறுகிறான். வாணி வினயமாக மறுக்கிறாள். அரசன் தன் கருத்தையே மீண்டும் வற்புறுத்துகிறான். வாணி மீண்டும் மறுக்கிறாள். அரசன் விடவில்லை. 'ஐந்துநாள் தவணை தருகிறேன் ;