பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

55

ஒருதலை யாக, உருவஞ் சிறிய

57

குறுமுனி தனியா யுறுமலை மற்றோர் தலையாச் சமமாய் நின்றதேல், மலைகளில் மலையமோ அலதுபொன் வரையோ பெரிது? சந்து செவிவழித் தந்த கங்கையும்,

60 பின்னொரு வாயசங் கவிழ்த்த பொன்னியும்; வருந்திய தேவரோ டருந்தவர் வேண்ட, அமிழ்திலுஞ் சிறந்த தமிழ்மொழி பிறந்த மலையம்நின் றிழிந்து, விலையுயர் முத்தும் வேழவெண் மருப்பும் வீசிக் காழகிற்

65

70

சந்தனா டவியுஞ் சாடி வந்துயர்

குங்கும முறித்துச் சங்கின மலறுந்

தடம்பணை தவழ்ந்து, மடமயில் நடம்பயில் வளம்பொழில் கடந்து குளம்பல நிரப்பி, இருகரை வாரமுந் திருமக ளுறையுளாப் பண்ணுமிப் புண்ணிய தாமிர வர்ணியும், எண்ணிடி லேயுமென் றிசைக்கவும் படுமோ? இந்நதி வலம்வர விருந்தநம் தொன்னகர் பொன்னகர் தன்னிலும் பாலிவுறல் கண்டனை தொடுகட லோவெனத் துணுக்குறும் அடையலர் 75 கலக்கத் தெல்லையும் கட்செவிக் சுடிகையும் புலப்பட வகன்றாழ் புதுவக ழுடுத்த மஞ்சுகண் துஞ்சுநம் இஞ்சி யுரிஞ்சி

உதயனு முடல்சிவந் தனனே! அதன்புறம் நாட்டிய பதாகையில் தீட்டிய மீனம்,

குறுமுனி - அகத்திய முனிவர். மலயம் – மலயமலை, பொன்வரை – இமய மலை. 55 முதல்58 வரையில் உள்ள அடிகள் புராணக் கதையைக் குறிக்கின்றன. அதனைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.)

சந்நு - ஒரு முனிவர் பெயர். இவர் காது வழியாகக் கங்கை வெளிப்பட்டது. (அதனைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.) காழ் அகில் வைரம் பொருந்திய அகில் மரம். சாடி - மோதி, குங்குமம் குங்கும மரம். பணை – வயல். வாரம் - ஓரம். ஏயும்-ஒக்கும். அடையலர் பகைவர். கட்செவி - பாம்பு. சுடிகை - உச்சிக் கொண்டை. மஞ்சு - மேகம். இஞ்சி மதில். உரிஞ்சி-உராய்ந்து, உதயன் சூரியன். பதாகை - கொடி.