பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

80

சுந்:

(எழுந்து)

ஜீவ:

85

90

சுந்:

95

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

உவாமதிக் குறுமா சவாவொடு நக்கும்.

வெயில்விரி யெயிலினங் காக்க இயற்றிய

எந்திரப் படைகளுந் தந்திரக் கருவியும்

பொறிகளும் வெறிகொளுங் கிறிகளு மெண்ணில:

சம்போ!சங்கர! அம்பிகா பதேஎ!

நன்று மன்னவ! உன்றன் றொல்குலங்

காக்கநீ யாக்கிய இவையெல்லாம் கண்டுளேம்.

அல்லா துறுதி யுவதோ? சொல்லுதி!

என்னை! என்னை! எமக்கருள் குரவ!

இன்னும் வேண்டிய தியாதோ? துன்னலர்

வெருவுவர் கேட்கினும்; பொருதிவை வென்றுகைக் கொள்ளுவ ரென்பதும் உள்ளற் பாற்றோ?

ஆயினும் அரணி லுளபுரை நோக்கி

நீயினி இயம்பிடில் நீக்குவன் நொடியே.

காலம் என்பது கறங்குபோற் சுழன்று மேலது கீழாக் கீழது மேலா

மாற்றிடுந் தோற்ற மென்பது மறந்தனை.

வினைதெரிந் தாற்றும் வேந்தன் முனமுனம், ஆயற் பாற்ற தழிவும் அஃதொழி

வாயிலு மாமென வையகம் புகலும்.

வாமதி - முழுநிலா. மாசு - களங்கம். 79,80-ஆம் அடிகள் மீன் உருவம் - எழுதப்பட்ட பாண்டியனுடைய கொடி காற்றில் அசைந்தாடுவது, முழு நிலாவினுடைய களங்கத்தை நக்குவது போலிருக்கிறது என்னும் கருத்துள்ளது. மீன்கள் பாசி முதலிய அழுக்கைத் தின்பது இயல் பாகலின், நிலாவில் உள்ள களங்கத்தை நக்குவதுபோலிருக்கிறது என்று கூறினார்.

எயிலினம்

கோட்டையின் மதில், கொத்தளம் முதலியவை. எந்திரப் படை, தந்திரக் கருவி, பொறிகள் பகைவர் போருக்கு வந்தால் அவர்களை எதிர்ப்பதற்காகக் கோட்டைச் சுவர்களின்மேல் அமைக்கப்படும் போர்க்கருவிகள். கிறிகள் - வஞ்சக வழிகள், துன்னலர் - பகைவர். வெருவுவர் - அஞ்சுவார்கள். பொருது - போர்செய்து, அரண்கோட்டை. புரை - குற்றம்; பலவினம். முனமுனம் - முதன் முதலில். ஆயற்பாற்று -ஆராயத்தக்கது.