பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

1-ம் ந :

2-ம் ந:

3-ம் ந:

4-ம் ந:

2-ம் ந:

3-ம் ந:

2-ம் ந:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

120 ஆம்! ஆம்! அவன்முகம் ஏமா றினதே.

விரசமா யரசனும் வியர்த்தனன் கண்டேன்.

முனிவரங் கோதிய தென்னை? முற்றும் துனிபடு நெருக்கிற் கேட்டிலன்.

யாதோ -

-

‘மனோன்மணி'எனப்பெயர் வழங்கினர். அறிவைகொல்?

125 வாழ்த்தினர் போலும், மற்றென்? பாழ்த்தஇத்

தந்தையிற் பரிவுளர் மனோன்மணி தன்மேல்

ஐயமற் றதற்கென்? யார்பரி வுறார்கள்? வையகத் தவள்போல் மங்கைய ருளரோ? அன்பே யுயிரா அழகே யாக்கையா

130 மன்பே ருலகுசெய் மாதவம் அதனான்

மலைமகள் கருணையுங் கலைமக ளுணர்வுங் கமலையி னெழிலும் அமையவோ ருருவாய்ப் பாண்டியன் தொல்குல மாகிய பாற்கடல் கீண்டெழு மதியென ஈண்டவ தரித்த

135 மனோன்மணி யன்னையை வாழ்த்தார் யாரே?

அன்றியும் முனிகட் கவள்மேல் வாஞ்சை இன்றுமற் றன்றே, இமையவர்க் காக முன்னொரு வெள்வி முயன்றுழி வன்னி தவசிகள் தனித்தனி யவிசு சொரிந்துந் 140 தழையா தவிதல் கண்டுளந் தளர்ந்து மன்னனுங் குடிலனுந் துன்னிய யாவரும் வெய்துயிர்த் திருக்க, விளையாட்டாக மைதிகழ் கண்ணி பேதை மனோன்மணி நெய்பெய் போழ்தில் நெடுஞ்சுழி சுழித்து

விரசமாய் - சுவையில்லாமல்; விருப்பமில்லாமல். துனி - வெறுப்பு. கீண்டு - கிழித்து, துன்னிய - நெருங்கியிருந்த, அவிசு - ஓமத்தீயில் சொரியும் நெய்.