பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

4- ம் ந:

145 மங்கிய அங்கி வலமாய்ப் பொங்கிப்

புங்கவர் மகிழ்ச்சியைப் பொறித்தது முதலா முனிவர் யாவரும் மணியென மொழியில் தங்கள் தலைமிசைக் கொள்வர் தரணியில் எங்குள தவட்கொப் பியம்புதற் கென்றே.

150 ஒக்கும்! ஒக்கும்! இக்குங் கைக்கு

மென்னும் இன்மொழிக் கன்னிக் கெங்கே ஒப்புள துரைக்க! ஓ! ஓ! முனிவர் அவ்வழி யேகுநர் போலும்.

இவ்வழி வம்மின் காண்குதும் இனிதே.

/61

(நகரவாசிகள் போக)

முதல் அங்கம் : முதற் களம் முற்றிற்று

புங்கவர் - உயர்ந்தவர். இக்கு இக்ஷு; கரும்பு.

-