பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

வா:

மனோ:

வா:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

110 வடதள வுதர வாணீ! மங்காய்!

வரும்பொழு தரும்பொருள் கேட்போம்

வாசிட் டாதிவை ராக்கிய நூற்கே.

நூறாக் கேட்கினும் நூலறிவு என் செயும்? நீறா கின்றதென் நெஞ்சம். நாளை 115 என்னுயிர் தாங்குவ தெவ்விதம்?

மன்னவன் கட்டளை மறுப்பதெவ் விதமே?

உன்றன் சிந்தையும் உந்தைதன் கருத்தும், மன் றல் வழுதிக் குரைக்க வருவதும், ஆமையின் புறச்சார் பலவன் ஒதுங்குவது 120 ஏயு மெழிற்கால் வாa!

நீயுரைத் தனையோ நின்னே சனுக்கே?

அதுவே யம்ம! என் உளநின் றறுப்பது.

19

20

21

வதுவையும் வேண்டிலர். வாழ்க்கையும் வேண்டிலர்! ஒருமொழி வேண்டினர்; உரைத்திலேன் பாவி.

125 நச்சினே னெனுமொழிக் கேயவர்க் கிச்சை. பிச்சியான், ஓகோ! பேசினே னிலையே! இனியென் செய்வேன்? என் நினைப் பாரோ? மனைவரா வண்ணமென் னனையு முரைத்தாள். ஊர்வரா வண்ணங் குடிலனும் ஓட்டினன். 130 யார்பா லுரைப்பன்? யார்போ யுரைப்பர்? உயிரே யெனக்கிங் கொருதுணை.

அயிரா வதத்தனும் அறியா வமுதே! (அழ)

22

வடதளம் - ஆல இலை. உதரம் - வயிறு. வடதள உதரம் - ஆலிலை போன்ற வயிறு. ஆலிலையை மகளிர் வயிற்றுக்கு உவமை கூறுவது மரபு. வாசிட்டாதி – ஞானவாசிஷ்டம் முதலிய நூல்கள். இது ஒரு வேதாந்தத் தமிழ்நூல். ஆளவந்தார் இதன் ஆசிரியர். வைராக்கிய நூல் - துறவறத்தில் வைராக்கியம் கொள்ளச் செய்கிற சாத்திரங்கள். உந்தை - உன் தந்தை. மன்றல் - திருமணம். வழுதி - பாண்டிய அரசன். அலவன் – நண்டு. ஏயும் - ஒக்கும். பிச்சி - பித்சி; பைத்தியக்காரி. அயிராவதத்தன் - அயிராவதம் என்னும் யானையையுடைய இந்திரன். இந்திரன் முதலிய தேவர்கள் அமுதத்தை உணவாக உடையவர். அமுதே - தேவாமிர்தம் போன்றவளே.

-

-