பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

மனோ:

69

அழுங்கலை! அழுங்கலை! அனிச்சமும் நெருஞ்சிலா அஞ்சிய அடியாய்! அழுங்கலை! அழுதுகண் 135 அஞ்சனங் கரைந்துநின் கஞ்சனக் கதுப்புங் கருத்ததே! ஏனிது! கருணைக் கடவுள்நின் கருத்தே முடிப்பக் காண்டி, அஃதோ மணங்கமழ் கோதையர் வந்தனர். அணங்குறல் பொன்னிகர் சுணங்கா ரணங்கே! (செவிலியும் தோழிப்பெண்களும் வர)

23

செவிலி:

140 தாயே! வந்துபார் நீயே வளர்த்த முல்லையு நறுமுகை முகிழ்த்தது. வல்லை காதலிற் கவிழ்வை போலும்!

மனோ:

முதற்றோழி:

66

போதுநீத் தெம்மனை புகுந்தநற் றிருவே!

போடி! நீ யாது புகன்றனை? தவத்தை

145 நாடிநா னிருக்க நணுகுமோ என்மனந்

துச்சமாம் இச்சையாற் சோர்வு?

24

நெருப்பையுங் கரையான் அரிக்குமோ நேர்ந்தே! 25

பொய்யன் றம்ம! மையுண் கண்ணால்

வந்துநீ நோக்கு, சந்தமார் முல்லை

150 நிரம்ப அரும்பி நிற்குந் தன்மை.

இன்றிரா அலரும் எல்லாம்.

துன்றிரா நிகர்குழல் தோகாய்! வருகவே.

26

(எல்லோரும் போக)

முதல் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.

அழுங்கு - வருந்து. அழுங்கலை - வருந்தாதே. அனிச்சம் - அனிச்சப் பூ, இது மிக மென்மையுடையது. நெருஞ்சில் - நெருஞ்சி முள். 'அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர், அடிக்கு நெருஞ்சிப் பழம்” என்பது திருக்குறள். கஞ்சனக் கதுப்பு - கண்ணாடி போன்ற கன்னம். பெண்களின் கன்னத்தைக் கண்ணாடிக்கு உபமானம் கூறுவது மரபு. முகை - அரும்பு. முகிழ்த்தது அரும்பிற்று. வல்லை - விரைவாக, போது நீத்து தாமரைப்பூவை விட்டு. செந்தாமரையிலிருக்கும் இலக்குமி அம் மலரைவிட்டு என் மனையில் வந்தது போன்றவளே. துச்சம் - அற்பம். இச்சை - காமம் ; காதல். கரையான் - சிதல். 'நெருப்பைக் கரையான் அரிக்குமோ', "நெருப்பில் ஈ மொய்க்குமோ' என்பன பழ மொழிகள்.

சந்தம்ஆர் முலை - அழகுள்ள முலை. துன்று இரா - நெருங்கிய இரவு.