பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

துணைபுண ரன்னத் தூவி யணைமிசைக் கண்படு மெல்லை - கனவோ நினைவோ. 'நண்ப! என்னுயிர் நாத'வென் றேங்கிப் 160 புண்படு மவள்போற் புலம்புறல் கேட்டுத் துண்ணென யாந்துயி லகற்றப் புக்குழி, குழலுஞ் சரியும்; கழலும் வளையும்; மாலையுங் கரியும்; நாலியும் பொரியும்; விழியும் பிறழும்; மொழியுங் குழறும்; 165 கட்டழ லெரியும்; நெட்டுயிர்ப் பெறியும்; நயனநீர் மல்கும்; சயனமே லொல்கும்; இவ்வழி யவ்வயிற் கண்டுகை நெரியா; தெய்வம் நொந்தேம், செய்கட னேர்ந்தேம்; அயினிநீர் சுழற்றி அணிந்தேம் பூதி; 170 மயிலினை மற்றோ ரமளியிற் சேர்த்துப் பனிநீர் சொரிந்து நனிசேர் சாந்தம்

-

பூசினேம்; சாமரை வீசினேம்; அவையெலாம் எரிமே லிட்ட இழுதா யவட்கு

வரவர மம்மர் வளர்க்கக் கண்டு

175 நொந்தியா மிருக்க, வந்தன வாயசம் ‘காகா இவளைக் கா' வெனக் கரைந்த. சேவலுந் திகைத்துத் திசைதிசை கூவின; கங்குல் விடிந்தும் அங்கவள் துயரஞ் சற்றுஞ் சாந்த முற்றில ததனால் 180 அரச!நீ அறியிலெஞ் சிரசிரா தென்றே

வெருவி யாங்கள் விளைவ துரைக்கும் நிமித்திகர்க் கூஉய்க் கேட்டோம் நிமித்தம்; பெண்ணை யந்தார் சூடிட நுந்தம்

பெண்ணை யந்தார் சூட்டெனப் பேசினர்.

எல்லை – அளவில். குழல் - கூந்தல். வளை - வளையல். நாலி - முத்து. நெட்டுயிர்ப்பு - பெருமூச்சு. ஒல்கும் - தளரும். அயினி நீர் - ஆலத்தி நீர். பூதி - திருவெண்ணீறு. சாந்து - சந்தனம். இழுது - நெய். மம்மர் - மயக்கம். வாயசம் - காகம். கங்குல் - இரவு. வெருவி அஞ்சி. நிமித்திகர் - சோதிடர். கூஉய் - கூவி; அழைத்து. பெண்ணையந்தார் - பனையின் அழகிய மாலை. பனைமாலை சேர அரசருக்குரியது.