பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

195 கனியுங் கருணையே கனியாக் காய்த்து, தருமநா டென்னும் ஒருநா மங்கொள் திருவாழ் கோடாஞ் சேரதே சத்துப்

புருடோத் தமனெனும் பொருவிலாப் புருடன் நீங்கி லில்லை நினது

200 பூங்கொடி படரப் பாங்காந் தருவே.

ஜீவ:

சுந்தர:

89

17

நல்லது! தேவரீர் சொல்லிய படியே,

இடுக்கண் களைந்த இறைவ!

நடத்துவன் யோசனை பண்ணி நன்றே.

18

யோசனை வேண்டிய தன்று. நடேசன்

ஜீவ:

சுந்தர:

ஜீவ:

205 என்றுள னொருவன். ஏவில்,

சென்றவன் முடிப்பன் மன்றல் சிறக்கவே.

கெடலறு சூழ்ச்சிக் குடிலனோ டுசாவி ... (எழுந்து)

அரகர! குருபர! கிருபா நிதியே!

காவாய் காவலன் ஈன்ற

210 பாவையை நீயே காவாய் பசுபதே !

(சுந்தரமுனிவர் போக)

தொழுதோம்; தொழுதோம். செவிலி! யவ்வறைக்

கெழுதுங் கருவிகள் கொணராய்

பழுதிலாக் குடிலற் குணர்த்துவம் பரிந்தே.

19

20

(ஜீவகன் முதலியோர் போக)

முதல் அங்கம்: நான்காம் களம் முற்றிற்று.

திருவாழ்கோடு - திருவாங்கூர் இராச்சியம். இது சேரநாட்டைச் சேர்ந்தது. நீங்கில் - தவிர்ந்தால். இடுக்கண் - துன்பம். களைந்த – நீக்கிய. ஏவில் - ஏவினால். பரிந்து - விரைந்து.

-