பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் அங்கத்தின் விளக்கம்

முதற்களம்

பாண்டியன் ஜீவகனும் அமைச்சன் குடிலனும் மனோன்மணி யின் திருமணத்தைப்பற்றி ஆலோசனை செய்கின்றனர். சேரநாட்டு மன்னன் புருஷோத்தமனுக்கு மனோன்மணியை மணம் செய்விக்கு மாறு கூறியவர் சுந்தரமுனிவரே என்பதைத் தெரிவித்து அதனை விரைவில் செய்து முடிக்க வேண்டும் என்று அரசன் கூறுகிறான். திருமணத்தைப் பற்றி மகிழ்ச்சி கொண்டவன்போலக் குடிலன் நடித்து, இதுபற்றித் தானும் பல நாட்களாகக் கருதியதுண்டு என்றும், கோட்டை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததால் இதுபற்றிப் பேச முடியாமற் போயிற்றென்றும், மனோன்மணியை உருவும் திருவும் அறிவும்

ண்மையும் படைத்த புருஷோத்தமனுக்கே மணம் செய்விப்பது தகுதி என்றும், அறியாதவர் பலவாறு பேசினாலும் உடனே தூது அனுப்புவது தகுதி என்றும் அரசனிடம் கூறுகிறான்.

‘அறியாதவர் பலவாறு பேசுவர்” என்பதன் கருத்து என்ன வென்று அரசன் கேட்கக் குடிலன், 'மணமகன் வீட்டாரே மணமகளைத் தேடி வருவது உலக வழக்கம்; மணமகள் இல்லத்தார் முதன் முதலில் மணமகன் இல்லத்தைத் தேடிப் போவது வழக்கம் அல்ல. ஆனால், அவசர காரியத்துக்குச் சாத்திரம் சம்பிரதாயம் பார்க்க வேண்டிய தில்லை' என்று கூறுகிறான். 'உலக வழக்கம் அப்படியானால் நாம் தூது அனுப்பவேண்டியதில்லை. மனோன்மணியை மணஞ் செய்ய விரும்பாத அரசர்கள் உண்டோ' என்று அரசன் கூற, அதற்கு அமைச்சன் கூறுகிறான்: ‘குமாரி மானோன்மணியை விரும்பாத அரசர்கள் யாருளர்? சோழன், கலிங்கன், கன்னடன், காந்தாரன், மச்சன், கோசலன், விதர்ப்பன், மராடன், மகதன் முதலாய அரசர்கள் மனோன்மணியை மணம்புரிய ஆவல் கொண்டு தவஞ்செய்கின்றனர். அவர்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு குறை உண்டு. ஆனால், அவன் கருத்தை அறியாமல் நாம் எப்படித் தூது அனுப்புவது என்பதுபற்றித் தான் சிந்திக்கிறேன்.'

இவ்வாறு அமைச்சன் கூறியதைக் கேட்ட அரசன், புருஷோத் தமன் கருத்தை அறியும் உபாயம் யாது என்று வினவ, குடிலன், அதற்கு