பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3


(சிற்றெண்)

உலகுடன் உணர்ந்தனை

உயிர் முழு தோம்பினை

நிலவுறழ் ஆக்கையை

மாதவர் தாதையை

மலர்மிசை மகிழ்ந்தனை

புலவருட் புலவனை

எனவாங்கு

(தனிச்சொல்)

(சுரிதகம்)

அருளுடை ஒருவர் நிற் பரவுதும் எங்கோ இருளறு திகிரியொடு வலம்புரித் தடக்கை

ஒருவனை வேண்ட இருநிலம் கொடுத்த நந்தி மால்வரைச் சிலம்பு நந்தி

ஒற்றை செங்கோல் ஓச்சிக்

கொற்ற வெண்குடை நிழற்றுக எனவே.

அம்போதரங்க ஒரு போகு

(தாழிசை)

கரைபொருநீர்க் கடல்கலங்கக் கருவரைமத் ததுவாகத் திரைபொருது புடைபெயரத் திண்டோளாற் கடைந்தனையே முகில்பெரு துடல்கலங்க முழவுத்தோள் புடைபெயர வரைபெரிய மத்தாக வாளரவம் கயிறாகத்

திரையிரியக் கடல்கடைந்து திருமகளைப் படைத்தனையே (அராகம்) (பேரெண்)

அமரரை அமரிடை அமருல கதுவிட

நுமரது புகழ்மிக மிகவிகல் அடுத்தனை

அலைகடல் உலகமும் அந்தணர்க் கீந்தனை

உலகொடு நிலவிய ஒருபுகழ் சுமந்தனை

3