பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்
137
(தாழிசை)
ஒல்லாத பிறப்புணர்த்தும் ஒளிவட்டம் புடைசூழ எல்லார்க்கும் எதிர்முகமாய் இன்பஞ்சேர் திருமுகமோ ஏர்மலர மணிப்பொய்கை எழிலாம்பற் பொதியவிழ ஊர்கோளோ டுடன்முளைத்த ஒளிர்வட்டம் உடைத்தன்றே!
கனல்வயிரம் குறடாகக் கனற்பைம்பொன் சூட்டாக இனமணி ஆரமா இயன்றிருள் இரிந்தோட அந்தரத் துருளுநின் அலர்கதிர் அறவாழி இந்திரர்கள் இனிதேத்த இருவிசும்பிற் றிகழ்ந்தன்றே!
வாடாத மணமாலை வானவர்கள் உள்ளிட்டார் நீடாது தொழுதேத்த நிற்சேர்ந்த பெருங்கண்ணு முகிழ்பருதி முகநோக்கி முறுவலித் துண்ணெகிழ்ந்து திகழ்தகைய கோட்டைசூழ் திருநதிகள் திளைத்தன்றே!
(அம்போதரங்கம்)
(பேரெண்)
மல்லல் வையம் அடிதொழு தேத்த அல்லல் நீக்கற் கறப்புனை ஆயினை ஒருதுணி வழிய உயிர்க்காண் ஆகி இருதுணி ஒருபொருட் கியல்வகை கூறினை
(இடையெண்)
ஏடலர் தாமரை ஏந்தும் நின்னடி வீடொடு கட்டினை விளக்கும் நின்மொழி விருப்புறு தமனிய விளக்கு நின்னிறம் ஒருக்குல கூடுற உஞற்றும் நின்புகழ்
(சிற்றெண்)
இந்திரர்க்கும் இந்திரன் நீ
மந்திர மொழியினை நீ
அருமை சால் அறத்தினை நீ
பெருமைசால் குணத்தினை நீ
இணையில்லா இருக்கையை நீ
மாதவர்க்கு முதல்வனும் நீ
ஆருயிரும் அளித்தனை நீ
பிறர்க்கறியாத் திறத்தினை நீ