பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/218

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

218

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3



இலம்படு புலவர் மண்டை, விளங்கு புகழ்க் கொண்பெருங் கானத்துக் கிழவன் தண்டார் அகலம் நோக்கின மலர்ந்தே (புறம் 155)

திணை: பாடாண்டிணை, துறை: பாணாற்றுப்படை கொண்கானங் கிழானை மோசிகீரனார் பாடியது.

ஒன்றுநன் குடைய பிறர்குன்றம், என்றும் இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் காணம் நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித் தொடுத்துணக் கிடப்பினுங் கிடைக்கும் அஃதான்று நிறையருந் தானை வேந்தரைத் திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலும் உடைத்தே (புறம் 156)

திணை: பாடாண்டிணை, துறை: இயன்மொழி. கொண்கானங் கிழானை மோசிகீரனார் பாடியது.

  • *