பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/235

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பண்டைத் தமிழக வரலாறு - துளு நாடு

235


கொண்ட மனைவியை அவளுடைய தோழி தேற்றுகிறாள். “வடுகச் சேனை முன்வர அதனைத் தொடர்ந்து பின்னே வந்த மோரியரின் தேர்ப் படையின் தேர்ச்சக்கரங்கள் தடையில்லாமல் செல்வதற்காக மலை மேல் அமைத்த வழியைக் கடந்து அயல் நாடு சென்ற தலைவர் அதிக நாள் தங்கமாட்டார். விரைவில் வந்து விடுவார், நீ வருந்தாதே” என்று கூறுகிறாள்.

முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் தென்திசை மாதிர முன்னிய வரவிற்கு விண்ணுற ஓங்கிய பணியிருங் குன்றத்து ஒண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த அறை யிறந்தவரோ சென்றனர் (அகம் 281:8-12)

புறநானூறு 175ஆம் செய்யுளும் இச்செய்தியைக் கூறுகிறது. கள்ளில் ஆத்திரையனார் என்னும் புலவர் தன்னையாதரித்த ஆதனுங்கன் என்பவனை ஒரு போதும் மறக்கமாட்டேன் என்று இச்செய்யுளில் கூறுகிறார். “மோரியர் தம்முடைய தேர் உருளை தடையில்லாமல் செல்வதற்காக மலைப்பாறைகளை வெட்டி அமைத்த பாதையில் சூரியன் இயங்குவது போன்ற உன் அறத்துறையாகிய நல்வழியில் நடக்கும் உன்னை மறக்கமாட்டேன்” என்று கூறுகிறார். இதன் வாசகம் இது:

விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர் திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த உலக இடைகழி அறைவாய் நிலைஇய மலர்வாய் மண்டிலத் தன்ன (புறம் 175:6-9)

(குறிப்பு : இப்புறப்பாட்டின் பழைய உரையாசிரியர் மோரியர் என்பதை ஓரியர் என்று தவறாகப் பிரித்துப் பொருள் கூறுகிறார். அவர் கூறுவது தவறான உரைஎன விடுக)

இந்த நான்கு சங்கச் செய்யுள்களிலே மோரியர் தென்னாட்டுக்கு வந்தனர் என்பதும் அவர்களின் தேர்கள் தடையில்லாமல் வருவதற்கு இடையிலிருந்த மலைப் பாறைகள் குறைத்துச் செப்பனிடப்பட்டன என்பதும் இச்செய்யுள்களில் கூறப்படுகின்றன. மோரியர் என்பவர் மௌரியராகிய அரச குலத்தார். மோரிய (மௌரிய அரசர் பாரத (இந்திய) நாட்டின் பேரரசராக இருந்து அரசாண்டவர்கள். அவர்கள் ஏறாத்தாழ கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 2ஆம் நூற்றாண்டு வரையில்