பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு - துளு நாடு

251



தொகுதி - 13 : தமிழக கலை வரலாறு:

இசை - ஓவியம் - அணிகலன்கள்

தமிழர்களின் பண்மரபு குறித்தும் தமிழ்நாட்டு ஓவியம் குறித்தும் விரிவான ஆய்வை இவர் மேற்கொண்டுள்ளார். இவ்வாய்வுகள் அனைத்தும் இத்தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் அணிகலன் குறித்து மயிலை சீனி. எழுதியுள்ள ஆய்வுகளும் இத்தொகுதியில் இடம்பெறுகின்றன.


தொகுதி - 14 : தமிழக ஆவணங்கள்:

சாசனச் செய்யுள் -செப்பேடுகள் -கல்வெட்டுகள்

கல்வெட்டுக்களில் செய்யுள்கள் மிகுதியாக எழுதப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் தொகுத்து சாசனச்செய்யுள் மஞ்சரி என்ற ஒரு நூலை மயிலை சீனி அவர்கள் வெளியிட்டார்கள். தமிழக வரலாறு தொடர்பாக செப்பேடுகளில் காணப்படும் விரிவான தகவல்கள் பற்றி இவர் ஆய்வு செய்துள்ளார். தமிழில் உள்ள கல்வெட்டுக்கள் தொடர்பாகவும் மயிலை சீனி அவர்களுடைய ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்தும் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன.


தொகுதி - 15 : தமிழக ஆவணங்கள்:

மறைந்துபோன தமிழ் நூல்கள்

மறைந்துபோன தமிழ்நூல்கள் என்னும் பெயரில் மயிலை சீனி அவர்கள் நூல் ஒன்றை எழுதியுள்ளார்.