பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/65

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்

65



குமார தாதுசேனன் (கி. பி. 515 - 524)

மொக்கல்லானன் இறந்த பிறகு அவனுடைய மகனான குமார தாதுசேனன் அரசாண்டான். இவனும் காளிதாசன் என்பவனும் நெருங்கிய நண்பர்கள். காளிதாசன் மொக்கல்லானனுடைய அமைச்சனுடைய மகன். குமார தாதுசேனன் ஒன்பது ஆண்டு அரசாண்டான் (சூலவம்சம் 41 ஆம் பரிச்சேதம் 1 - 3). இவன் தன்னுடைய நண்பனான காளிதாசன் இறந்தபோது அந்தத் துயரம் பொறுக்க முடியாமல் அவனுடைய ஈமத்தீயில் விழுந்து உயிர்விட்டான் என்பர்.

கீத்திசேனன் (கி.பி.524)

பிறகு, குமார தாதுசேன்னுடைய மகனான கீத்திசேனன் அரசனானான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் 9ஆம் மாதம் இவனுடைய தாய்மாமனான சிவன் என்பவன் இவனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றி யரசாண்டான் (சூலவம்சம் 41ஆம் பரிச்சேதம் 4).

சிவன் (கி. பி. 524)

தன்னுடைய மருமகனான கீத்திசேனனைக் கொன்று அரசனான சிவன் இருபத்தைந்தாம் நாளில் உபதிஸ்ஸன் என்பவனால் கொல்லப்பட்டு இறந்தான் (சூலவம்சம் 41ஆம் பரிச்சேதம் 5 – 6).

உபதிஸ்ஸன் III (கி.பி.525-526)

சிவனைக்கொன்று இலங்கையாட்சியைக் கைப்பற்றின உபதிஸ்ஸன், மொக்கல்லானனுடைய தங்கையை மணந்தவன். கஸ்ஸபனுக்கு அரசாட்சி ஆசையையுண்டாக்கித் தாதுசேன அரசனைச் சிறையில் அடைக்கச் செய்து, பிறகு அவ்வரசனைச் சுவரில் வைத்துக்கட்டிக் கொன்றவன். இவன் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் முக்கியமானவர் களுக்கு அரசாங்க அலுவல்களைக் கொடுத்து அவர்களைத் தன்வசப்படுத்திக் கொண்டான். இவன் தன்னுடைய மகளைச் சிலா காலன் என்பவனுக்கு மணஞ் செய்துகொடுத்தான். இவனுக்குக் கஸ்ஸபன் என்று ஒரு மகன் இருந்தான்.

உபதிஸ்ஸனுடைய மகளை மணஞ்செய்த சிலாகாலன் ஆட்சியில் அமர்ந்து அரசனாக இருக்க ஆசைப்பட்டுத் தன்னுடைய மாமனாரான உபதிஸ்ஸனோடு போர் செய்தான். உபதிஸ்ஸன் வயதானவனாகையால் அவனுடைய மகனான கஸ்ஸபன் சிலாகாலனோடு போர்செய்தான். சில-