இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர், துளு நாடு
7
ஆய்வுகள், குறிப்பாக தொல்லெழுத்தியல் ஆய்வு போன்றவை, சங்க இலக்கியப் பிரதி வழி அறியப்படும் தகவல்களை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதைக் காண்கிறோம். இப்பின்புலத்தில் மயிலை சீனி. அவர்களின் இந்நூல்கள் குறிப்பிடத் தக்கவையாக அமைகின்றன.
இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி.
சென்னை - 96
ஏப்ரல் 2010
தங்கள்
வீ. அரசு
தமிழ்ப்பேராசிரியர்
தமிழ் இலக்கியத்துறை
சென்னைப் பல்கலைக்கழகம்