பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4


அருகில் பன்னசாலை (பர்ண சாலை - ஓலைக் கொட்டகை) அமைத்துக் கொண்டு அங்குத் தங்கியிருந்து போதி மரக்கிளையையும் சங்க மித்திரையையும் வரவேற்றான். அவன் தங்கியிருந்த இடம் சமுத்த பன்னசாலை (சமுத்திர பர்ண சாலை) என்று பெயர் பெற்றது (மகாவம்சம் XIX : 26) பிறகு அந்த அரசன் அந்த இடத்தில் மண்டபம் கட்டினான் (மகாவம்சம் XIX : 27, 28). போதி மரக்கிளையுடன் அனுப்பப்பட்ட எட்டுப் போதிமரக் கன்றுகளில் ஒன்றை அவன் அந்த இடத்தில் நட்டான் (மகாவம்சம் XIX : 60). பிறகு இந்தப் போதிமரத்துக்குக் கீழே புத்தருடைய பாத பீடிகை யமைக்கப்பட்டது. இதற்கு மணி பல்லங்கம் (மணிப் பலகை, மணிப்பீடம்) என்று பெயர். மணிப் பல்லங்கம் என்னும் பெயர் பிற்காலத்தில் மணிபல்லவம் என்று திரிந்து வழங்கிற்று என்று தோன்றுகின்றது. இந்தப் புத்த பீடிகையை மணிமேகலைக் காவியம், மணிப் பீடிகை என்றும் தரும பீடிகை என்றும் கூறுகின்றது.


காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்திலிருந்து தெற்கே முப்பது யோசனை தூரத்தில் மணிபல்லவத்துறை இருந்தது. (மணிமேகலை 6 : 13). தமிழகத்திலிருந்து (சோழ நாடு பாண்டிய நாடு களிலிருந்து) கிழக்கே வெகு தூரத்திலிருந்த சாவக நாட்டுக்கு (கிழக்கிந்தியத் தீவுகளுக்கு) வாணிகத்தின் பொருட்டுச் சென்ற தமிழக நாவிகர்கள் மணிபல்லவத் துறையில் தங்கி அங்குப் புத்தபாத பீடிகைக்கு எதிரில் இருந்த கோமுகி என்னும் ஏரியிலிருந்து குடிநீரைக் கப்பல்களில் எடுத்துக்கொண்டு பிறகு பிரயாணந் தொடங்கினார்கள்.

பாண்டி நாட்டுக் கப்பல் வாணிகர் சாவகத் தீவுகளுக்கு வாணிகத் தின் பொருட்டுக் கடலில் சென்ற போது இடைவழியில் மணிபல்லவத் துறையில் தங்கிச் சென்றார்கள் (மணி 14 : 79-84). கோவலன் மகள் மணிமேகலை பௌத்த மதத்தைச் சேர்ந்த பிறகு மணி பல்லவஞ் சென்று அங்கிருந்த புத்தபாத பீடிகையை வணங்கி மீண்டும் தன் ஊருக்குத் திரும்பி வந்தாள் (மணி 25: 120 127. இலங்கையின் வட பகுதியாகிய இப்போதை யாழ்ப் பாண தேசம் அக்காலத்தில் நாக நாடு என்று பெயர் பெற்றிருந்தது. அந்த நாக நாட்டை அக்காலத்தில் அரசாண்ட வளைவாணன் என்னும் நாகுல மன்ன மகள் பீலிவளை என்பவள் மணிபல்லவத் துறையிலிருந்து புறப்பட்டுக் காவிரிப் பூம் பட்டினத்துக்கு வந்து கடற்கரைச் சோலையிலே தங்கியிருந்தபோது அப்பட்டினத்தில் இருந்த வடிவேற்கிள்ளி என்னும் சோழன் அவளுடன் உறவு கொண்டான். சில காலங்கழித்து அவள் தன்னுடைய