பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4


இருந்தவன்) ஹத்திகும்பா குகைக்கோவிலில் பிராகிருத மொழியில் எழுதி வைத்திருக்கிற சாசனத்தில் இச்செய்தியைக் கூறியுள்ளான். (ஹதிகும்பா என்னும் இடம் ஒரிசா நாட்டிலே பூரி மாவட்டத்தில் உள்ள புவனேசுவரம் என்னும் ஊருக்கு மூன்று மைல் தூரத்தில் இருக்கிறது). வ்வரசனுடைய பல செய்திகளைக் கூறுகிற இந்தச் சாசனம், காரவேலன் பிதுண்ட நகரத்தை அழித்துக் கழுதை பூட்டிய ஏரினால் உழுத செய்தியையும் கூறுகிறது. அந்தச் சாசனத்தின் 11வது வரியிலே, "ச ஆவராஜ நிவேஸிதம் பீதுண்டம் கதபநம் கலேன காஸயதி" என்று எழுதப்பட்டிருக்கிறது. அதாவது, ஆவ அரசன் அமைத்த பிதுண்டம் என்னும் கோட்டையைக் கழுதை ஏரினால் உழுதான் என்பது பொருள்.'


ஹரிபத்ரீ என்பவர் எழுதிய ஆவஸ்யக விருத்தி என்னும் நூலிலும், ஹேமசந்திரர் எழுதிய வீரசரித்திரத்திலும் இச்செய்தி கூறப்பட்டிருக்கிறதாம். கோணிகன் என்னும் அரசன் வைசாலி நாட்டரசனை வென்று அவனுடைய கோட்டையை இடித்துத் தகர்த்துக் கழுதைகள் பூட்டிய ஏரினால் உழுதான் என்று அந்த நுல்கள் கூறுகின்றன. என்பர். இதனால், அரசர் கழுதையினால் ஏர் உழுத வழக்கம் தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல் கலிங்க தேசம், வைசாலி முதலிய வடநாடுகளிலும் இருந்தது என்பது தெரிகின்றது.

இதுகாறுங் கூறப்பட்டதிலிருந்து, தொல்காப்பியப் பொருளதி காரத்தில் கூறப்பட்ட செய்திகள் அக்காலத்தில் மக்களிடத்திலிருந்த பழக்க வழக்கங்களைத்தான் விளக்குகின்றன என்பது தெரிகின்றது. அந்தப் பழக்க வழக்கங்கள் பிற்காலத்திலும் நெடுங்காலம் வரையில் நடைமுறையில் இருந்தன. என்பதும் சாசனச் சான்றுகளால் அறியப்படுகின்றன.

அடிக்குறிப்புகள்

1. The Hatigumpa Inscriptions of Karavela. Pp. 71-89. Epigraphia Indica. Vol.

XX.