பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

211



சுள்ளியாற்றின் வடகரைமேல் கிழக்கு மேற்காக, நீண்ட சதுரமாக அமைந்திருந்த வஞ்சிமாநகரம் பெரிய நகரமாகப் பரந்திருந்தது. இந்த நகரத்திலே வழக்குரை மன்றம், பொதியில் சதுக்கம், செய்குன்று, பூங்கா, அறச்சாலை, நீர் நிலைகள், சிவபெருமான் கோயில், திருமால் கோயில், பௌத்த சமணப்பள்ளிகள் முதலானவை இருந்தன.9

தெருக்கள் கிழக்கு மேற்காகவும் வடக்குத் தெற்காகவும் அமைந்திருந்தன. நகரத்தின் மையத்தில் அகலமும் நீளமும் உள்ள பெரிய நெடுஞ்சாலை கிழக்கு மேற்காக அமைந்திருந்தது. அந்த நெடுஞ்சாலை இந்த நகரத்திலிருந்து முசிறித் துறைமுகப் பட்டினத்திற்குச் சென்றது. நகரத்துத் தெருக்களில் பலவகையான தொழிலாளர்களும் வசித்திருந்தனர். பலவகைப் பொருள்கள் விற்கப்பட்ட கடைத்தெருக்கள் இருந்தன. நகரத்தைச் சூழ்ந்து கோட்டை மதில்கள் இருந்தன. மதிலைச் சார்ந்திருந்த தெருக்களில் மீன், உப்பு, கள், இறைச்சி, அப்பம், பிட்டு முதலான பொருள்களை விற்கும் வாணிகர் இருந்தார்கள்.10 இந்தத் தெருக்களை அடுத்து, மட்பாண்டம் செய்வோர், செம்பு பித்தளை வெண்கலப் பாத்திரம் செய்வோர், இரும்புக் கருவிகளைச் செய்வோர், பொன் வெள்ளி நகை செய்வோர், மரத் தொழில் செய்வோர், கட்டட வேலை செய்வோர், தோல் கருவிகள் செய்வோர், துணி தைப்போர் முதலான தொழிலாளிகள் குடியிருந்த தெருக்கள் இருந்தன.11 மாலைகட்டுவோர் இசைவாணர் சங்குவளை அறுப்போர் நடன ..... பொன்வாணிகர் முதலானோர் இருந்த வீதிகளும் இருந்தன.13 அமைச்சர், அரச ஊழியர், அரண்மனை ஊழியர் முதலானோர் வீதிகளும் குதிரைப் பந்தி, யானைப்பந்தி முதலான இடங்களும் இருந்தன.14 வீடுகளில் இருந்து வெளிப்படும் கழிவுநீர் சாக்கடைகள் வழியாகச் சுருங்கைகளில் ஓடி நகரத்துக்கு அப்பால் நகரத்தைச் சூழ்ந்திருந்த அகழிகளில் விழுந்தன.15

அரண்மனைகள்

சேரமன்னர்களின் அரண்மனைகள் வஞ்சிமா நகரத்தின் நடுவிலே அமைந்திருந்தன. ஒன்று, ‘பொன் மாளிகை' என்று பெயர் பெற்றிருந்தது. 'கொடிமதில் மூதூர்நடுநின்றோங்கிய தமனிய மாளிகை' 16 (தமனியமாளிகை-பொன்மாளிகை) இந்தப் பொன் மாளிகையின் நிலா முற்றத்தில் இருந்து, பறையூர்க் கூத்தச் சாக்கையன் ஆடிய கொட்டிச் சேதம் என்னும் கூத்தைச் செங்குட்டுவனும் அவனுடைய அரசியும்