பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு
231
பெருநாரை, பெருங்குருகு என்னும் இரண்டு இசையிலக்கிய நூல்களை அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். முதுகுருகு, முது நாரை என்னும் இரண்டு நூற் பெயர்களை இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் கூறுகிறார். பெருநாரைக்கு முதுகுருகு என்றும், பெருங்குருகுக்கு முதுநாரை என்றும் பெயர்கள் வழங்கினார்கள் போலும். இந்நூல்களை இயற்றிய ஆசிரியர்களின் பெயர்கள் தெரியவில்லை.
இசை நுணுக்கம் என்பது ஓர் இசைத் தமிழ் நூல். இதன் பெயரே இது இசைக்கலையைப் பற்றிய நூல் என்பதைத் தெரிவிக்கிறது. இந் நூலை இயற்றிய ஆசிரியர் பெயர் சிகண்டி என்பது. சயந்தகுமாரன் என்னும் அரச குமாரனுக்கு இசைக் கலையைக் கற்பிப்பதற்காக இந்நூல் இயற்றப்பட்டது.
பஞ்சபாரதீயம் என்னும் இசைநூலை நாரதர் என்பவர் இயற்றினார். பஞ்சமரபு என்னும் நூலை எழுதியவர் அறிவனார் என்பவர். இசைத்தமிழ் பதினாறு படலம் என்னும் நூலை சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் குறிப்பிடுகிறார். இந்த நூல் 16 படலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது; ஒவ்வொரு படலமும் பல ஒத்துகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
யாமளேந்திரர் என்பவர் இந்திரகாளியம் என்னும் இசைநூலை எழுதினார். முறுவல், சயந்தம், செயிற்றியம் என்னும் பெயருள்ள இசை நூல்களும் இருந்தன. பரதம், அகத்தியம் என்னம் இசை நூல்களும் அக்காலத்து நூல்களே. பரதசேனாபதீயம் என்னும் நூலை இயற்றியவர் ஆதிவாயிலார் என்பவர். பாண்டியன் மதிவாணனார் என்பவர் மதிவாணனார் நாடகத் தமிழ் நூல் என்னும் பெயருள்ள நூலை இயற்றினார். இவை இசை, நாடகம் இரண்டையும் கூறுகிற நூல்கள். இத்தனை நூல்கள் அக்காலத்தில் இருந்தன என்றால், அக்காலத்தில் இசைக்கலை மிக உயர்ந்த நிலையில் இருந்ததென்பது தெரிகிறதல்லவா? இசைக்கலை உயர்ந்த நிலையில் இருந்ததற்குக் காரணம், அக்காலத்து அரசர்களும் பிரபுக்களும் கலைஞர்களை ஆதரித்து வந்ததுதான். சங்ககாலத்துப் பிறகு வேறு சில இசை நூல்கள் இயற்றப்பட்டன. அவற்றை இங்குக் கூறவேண்டியதில்லை.
சங்ககாலத்திலே இசைப்பாட்டுகளை அமைப்பதற்குக் கலிப்பாவும் பரிபாடலும் உபயோகப்பட்டன. “கலியும் பரிபாடலும் இசைப் பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன” என்று பேராசிரியர் என்னும்